Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால்

மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால்

மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால்

இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக இளம்பெண்கள், மிக இறுக்கமாக

உள்ளாடை ( #Inner #Wear ) அணிவதால், பிரேஸியரின் ஸ்ட்ராப் எனப்படும் பட்டை, தோள்களில் அழுந்தப் பதிந்து கருமையும், நாளடைவில் புண்ணாக மாறி தழும்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு உள்ளாடை ( Inner Wear ) விற்கும் கடைகளில் கிடைக்கக் கூடிய ஸ்ட்ராப் குஷனை வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். தவிர, குளிக்கும் முன், ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு பால் கலந்து கருமை படிந்த இடத்தில் தேய்த்துக் கழுவவும். இது இறந்த செல்களை நீக்கும். பின்னர் பால் ஏடு அல்லது வெண்ணெயைக் கொண்டு கருமை படர்ந்த இடத்தில் தேய்த்து மசாஜ் கொடுக்கவும். நாளடைவில் கருமை மறைந்துவிடும்.

One Comment

Leave a Reply