விஜய் டிவியால் அவமானப்பட்ட BIGG BOSS ஐஸ்வர்யா தத்தா
விஜய் டிவியால் அவமானப்பட்ட பிக்பாஸ் ( #BIGGBOSS ) ஐஸ்வர்யா தத்தா ( #AiswaryaDatta )
கடந்த சில வாரங்களுக்கு முன்பே இந்த பதிவை எழுதிமுடித்திருந்தாலும்,
தற்போது இதனை இணையத்தில் பிரசுரிக்க நேரம் வந்தது. கடந்த பண்டிகைகளில் ஒரு பண்டிகையின்போது நம்ம விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் கொண்டாட் டம் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி யில் பங்கேற்றவர்களில் ஒருசிலர் தவிர ஏனைய அனைவரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை மா.கா. பா ஆனந்த், மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நடிகைகள் ஐஸ்வர்யாவையும், யாஷிகாவையும் ( ( Aiswarya Datta and Yashika )அழைத்து, ஐஸ்வர்யா தத்தாவிடம் ஒரு பாடலை பாடச் சொல்லியும் அதற்கேற்ப யாஷிகாவை பாடல் வரிகளை உடல்மொழியில் வெளி க்காட்டவும், எதிர்புறத்தில் இருவர் நின்று கொண்டு காதுகளில் ஹெட்ஃபோன் மாடிக்கொண்டு பாடலை கேட்டுக் கொண்டே சரியான பாடல் வரிகளைக் கண்டு பிடிக்க வேண்டும்.
அப்போது சொப்பன சுந்தரி நான்தானே என்ற திரைப்பாடலை பாடுமாறு, மா.க.ப ஆனந்த் சொல்ல, அதற்கு ஐஸ்வர்யாவோ வார்த்தையை சரியாக உச்சரிக்கத் தெரி யாமல் ‘சப்பன சுந்தரி நான்தானே’ என்று பாடினார். அதனை கேட்ட யாஷிகாவும் தனது உடல்மொழியில் அந்த பாடலை வார்தைகளை புரிய வைக்க முயன்றார்.
ஆனால் அரங்கத்தில் இருந்த அனைவரும் அதன் தவறான பொருளை உணர்ந்து, கொள்ளென்று சிரித்து விட்டனர். அதன்பிறகு மா கா பா ஆனந்த் அந்த பாடல் வேண் டாம் என்று சொல்லி வேறு ஒரு பாடலை கொடுத்து பாடச்சொல்லி அந்த சூழ்நிலையை சமாளித்தார் மா.க.ப ஆனந்த்.
இதில், வார்த்தைகளின் உச்சரிப்பு புரியாமல் பாடிய ஐஸ்வர்யா (Aiswarya Datta), அந்த சரியான வார்த்தைக்குண்டான பொருளையும், தான் தவறாக பாடிய வார்த்தையின் பொருளையும் கேட்டறிந்து, அந்த அரங்கத்திலேயே அவமானத்தால் கூனிகுறுகி நின்றது பார்ப்பதற்கு சற்று வேதனையாக இருந்தது.
தமிழ் அறியாத அவர்களிடம், எளிதான பாடல் வரிகளை கொடுத்து உச்சரிக்க சொல்லியிருக்க வேண்டும். ஆனால் Vijay TVயோ இப்படி அவர்களை அவமானப்பட காரணமாக இருந்தது வேதனையாக இருக்கிறது.
விதை2விருட்சம் சத்தியமூர்த்தி