Sunday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்

பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்

பட்டா ( #PATTA ) – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்

ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு

ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும்.

ஒன்று பத்திரம் ( #SALEDEED ), இன்னொன்று பட்டா ( #PATTA ).

பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம், பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம். இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்!

பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிற தோ அவரே தற்போதைய உரிமையாளர். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும். கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும்.

அடுத்ததாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய பட்டாக்களின் வகைகளை கீழே பார்க்கலாம்!!

எட்டு வகையான பட்டாக்கள் – சட்டம் தெளிவோம்.

1. யு.டி.ஆர் பட்டா ( UDR – Updating Data Registry ):

மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி ரீசர்வே க்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து (வீட்டில் உள்ள ஆவணங்களை புத்தகங்கள் எல்லாம் தேவையுள்ளது தேவையற்றது என பிரித்து நம்முடையது பிறருடையைது என ஒமுங்குபடுத்தும் வேலையை போல்) மிக பெரிய அளவில் 1979 முதல் 1989 வரை தமிழகம் முழுவதுமாய் யு.டி.ஆர. பட்டா (Updating Data Registry ) தந்து அதனை கம்ப்யூட்டரில் ஏற்றினார்கள்.

அதாவது மேனுவல் ஆவணங்கள் கணினி மயமானது முதல் இப்பொழுது வரை இதனை தான் பட்டா ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம், தற்பொழுது இவை எல்லாம் ஆன்லைனில் ஏற்றப்பட்டு விட்டது.

மேனுவல் பட்டா ( Manuel Patta )

இப்பொழுது நடக்கும் சொத்து பரிவர்த்தனைகளுக்கான பட்டா பெயர் மாற்றங்கள் சர்வே எண் உட்பிரிவுகள் பெரும்பாலும் இந்த பட்டாவில் தான் நடக்கிறது. பட்டா வில் பெயரை சேர்த்தல், பட்டாவில் பெயரை மாற்றுதல், பட்டாவில் சர்வே எண் உட் பிரிவு செய்தல், போன்ற வேலைகளுக்கு இன்னும் பலர் அரசு, எந்திரத்துடன் போராடி வருகின்றனர்.

இன்னும் பலர், பட்டாவில் தந்தை பெயர் பிழை, தன் பெயர் பிழை, சர்வே எண் பிழை, அளவு பிழை என்று அதனை திருத்துவதற்கும் அலைந்து கொண்டு இருக்கி றார்கள். இன்னும் நிறைய இளம் தலைமுறையினர் தன் பூட்டன் ,தாத்தா, பங்காளி ,அப்பா பெயரில் இருக்கும் பட்டாவை மாற்றாமல் நிலுவையில் வைத்து இருக்கி றார்கள்.

இவர்கள் பட்டாவை கிராம கணக்கரிடம் கொண்டு சென்றால் தான் பல நிதர்சனங்கள் புரியும்.

2. நத்தம் நிலவரி திட்டம் – தோராய பட்டா & தூய பட்டா:

தோராய பட்டா முன்பக்கம்

யூ.டி.ஆர் பட்டாவில் நத்தம் நிலத்தை தவிர மீதி நிலங்களை பட்டியல் இட்டார்கள், அளந்தார்கள்! நத்தம் என்பது பொதுமக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக வெள் ளைகாரன் காலத்திலேயே வகைபடுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டது. பெரும்பாலும் நத்தம் நிலம் பழைய ஊர்களிலேயே அமைந்து இருக்கும். அந்த நத்தம் நிலத்திற்கு தான் தோராய மற்றும் தூய பட்டா வழங்கினர்.

தோராய பட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டா அதில் குடியிருந்தவர்களுக்கு வழங்கியது.

நத்தம் நிலவரித்திட்ட தோராய பட்டாவில் ( பிழைகள், தவறுகள் இருக்கலாம் ) அதில் ஏதாவது சிக்கல்கள்,பெயர் பிழைகள் அளவு பிழைகள் இருப்பதை மக்கள் தெரிவித்தால் அதனை திருத்துவதற்க்கு கால அவகாசம் கொடுத்து கொடுக்கும் பட்டா, “தோராய பட்டா” இது ஒரு தற்காலிகமான பட்டா!

முழுமை விவரம் பெற்று தவறு எல்லாம் களைந்து மக்களுக்கு கொடுப்பது நத்தம நிலவரி திட்ட தூயப்பட்டா ஆகும். அதாவது கல்யாண பெண் மேக்கப்க்கு முன் மேக்கப்புக்கு பின் என்பதில் இருக்கும் வித்தியாசம்தான் தோராய பட்டாவுக்கும் தூய பட்டாவுக்கும் உள்ள வித்தியாசம். பெரும்பாலும் இரண்டு பட்டாவும் மேனுவ லாகவே இருக்கும். பட்டா ஆவணத்தின் பின்புறம் நிலத்தின் வரைபடம் அளவுக ளுடன் வரையபட்டு இருக்கும்.

ஒரு சிலர் தோராய பட்டா வாங்கியதும் பட்டா வாங்கிவிட்டாடோம் என்ற சந்தா தோஷத்தில் இருந்து விடுவார்கள். அதில் அளவுபிழைகள் இருக்கிறதா என நிலத்தை அளந்து ஒப்புமைபடுத்தி சரி பார்த்துகொள்ள வேண்டும். ஏனென்றால் நத்தம் நிலத்தில் இதுவரை இவ்வளவு இடம் நீ அனுபவிக்கிறாய் என ஆவணபடு த்தபடவில்லை, தோராய பட்டா வழங்கும் போது நீங்கள் அனுபவிக்கும் இடம் ஆவண படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

தூய பட்டா:

நத்தம் நிலத்திறகு அரசு பட்டா வழங்குவது பொதுமக்களுக்கு என நினைக்க வேண் டாம். வரி விதிக்காமல் நீங்கள் அனுபவிக்கும் நிலத்தை வரிவிதிப்புக்குள் கொண்டு வரவும், சாலை, குளம் ,பாதை இடங்களை ஆவணப்படுத்தி ஆக்கிரமிப்புகள் ஆகா வண்ணம் தடுக்கவும் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தபடும்போது பை புராடக்டாக தங்களுக்கு பட்டா வழங்கபடுகிறது.

எனவே நிலவரிதிட்ட தோராய பட்டா வழங்கும் போது நிலத்தின் அளவுகளை கட்டாயம் சரி பார்க்கவும் இன்னும் பலர் தோராய பட்டா வாங்கியதுடன் நின்று விடுவர். தூயபட்டா அடுத்த ஆறுமாதத்துக்குள் கொடுத்து இருப்பர். அதனை அணுகி வாங்காமலேயே தோராய பட்டாவையே நிரந்தரபட்டா என்று நினைத்து கொண்டு இருப்பர்.

3. ஏ.டி கண்டிசன் பட்டா :

ஏ.டி.கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதிதிராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டு மனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதிதிராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பர்.

மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி , பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார்.

அப்படி ஒப்படை செய்யும் போது , கொடுக்கும் பட்டா ஏ.டி.பட்டா ஆகும். அது பெரும் பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது.

பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனி வட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இருக்கும்.

முக்கியமாக மேற்படி இடத்தை பெறுபவர் வேறு யாருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்க கூடாது. விற்றாலும் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும் என்ற கண்டிசன்கள் முக்கியமானதாக இருக்கும்

இதே தன்மையில் பயிர் செய்ய நிலமில்லாத ஆதிதிராவிட பழங்குடியின மக்களு க்கு 5௦ சென்டில் இருந்து ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்படும்.

4. நில ஒப்படை பட்டா:

வீட்டு மனைகள் ! விவசாய நிலங்களை அரசு இலவசமாக ஒப்படைப்பது ஒப்படை பட்டா ஆகும்! முன்னாள் ராணுவ வீரர்கள் , பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள், நலிவுற் றவர்கள், அரவாணிகள், போன்றோர்களுக்கு அரசு நிலங்களை இலவசமாக கொடு க்கும். அதனை நில ஒப்படை பட்டா என்பர். இவற்றிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் பிறருக்கு விற்க கூடாது என்று கண்டிசன்கள் இருக்கும். இதனை டி.கார்டு கண்டிசன் பட்டா என்றும் சொல்லுவர்.

5. டி.எஸ்.எல்.ஆர் பட்டா:

டி.எஸ்.எல்.ஆர் பட்டா என்பது டவுன் சர்வே லேன்ட் ரெகார்ட் ஆவணம் . இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நகர் சர்வேயர்களை கொண்டு நிலங்க ளை மிக துல்லியமாக சர்வே செய்து உருவாக்கபடும் ஆவணகளில் இருந்து பொது மக்களுக்கு ஒரு EXTRACT எடுத்து கொடுப்பார்கள் . இந்த TSLR EXTRACT என்பது பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும் .

கிராம பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும் நகர பகுதிகளில் இருக்கும் பட்டாவி ற்கும், இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், நகர பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் மதிப்பு மிக்கது , அதனால் ERROR மிக மிக குறைந்தே இருக்கும்.

ஆனால் கிராம பகுதி சர்வேகளில் ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதல் குறைதல் இருக்க லாம். அதனால் அதிக துல்லியமும் , எச்சரிக்கை உணர்வுடனும் நகர பகுதி சர்வேக் கள் செய்யபடுகிறது.

6. தூசி பட்டா:

கிராம கணக்கில் 2 ம் நம்பர் புக்கில் “C” பதிவேட்டில் கொடுக்கும் பட்டா 2C பட்டா ஆகும். ஆனால் பேச்சு வழக்கில் தூசி பட்டா என்று அழைக்கபடுகிறது.

அரசு நிலத்தின்மேல் இருக்கும் (புளியமரங்கள், பனை மரங்கள், கனிதரும் மரங்க ள், ) மரங்களை அனுபவிக்க பராமரித்து கொள்ள , மேற்படி மரங்களுக்கு உரிமைய ளித்து கொடுக்கப்படும் பட்டா 2C பட்டா இதனை மர பட்டா என்றும் அழைப்பர்.

தனி பட்டா மற்றும் கூட்டு பட்டா

7. கூட்டு பட்டா:

தனிப்பட்டாவுக்கு நேர் எதிர் கூடுப்பட்டா , கூட்டுபட்டாவில் நிலத்தின் அளவு, சர்வே எண் உட்பிரிவு, FMB – சப்டிவிசன் தனி தனியாக யார் யாருக்கு எவ்வளவு என்று குறிப்பிட்டு இருக்காது, உதாரணமாக ஒரு பெரிய கேக்கை (யார் யாருக்கு எத்தனை துண்டு, எந்த பக்கம் என்று சொல்லாமல் ) நான்கு மகன்களிடம் கொடுத்து நீங்களே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்வது போல் தான்.

நிலத்தில் நான்கு பேரோ, மூன்று பேரோ, இரண்டு பேரோ, அல்லது பல பேரோ ஒவ்வொரு மூலையில் நின்று அனுபவிப்பர். அவர்கள் பெயர்கள் எல்லாம் பட்டா வில் இருக்கும் ஆனால் சர்வே எண் உட்பிரிவு, அளவு பிரிவு, FMB உட்பிரிவு, செய்யப் பட்டு இருக்காது, பட்டாவே இல்லாமல் இருப்பதற்கு கூட்டு பட்டா சிறந்தது, கூட்டு பட்டவை விட தனிப்பட்டா சிறந்தது.

8. தனி பட்டா:

தனிபட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும் . மேற்படி நிலத்தின் சர்வே எண்ணில் தனியாக சப் டிவிசன் செய்யப்பட்டு இருக்கும். பேச்சு வழக்கில் பட்டா உடைந்து இந்த நபர் பெயருக்கு மாறி இருக்கும் என்று சொல்வோம்.

புல எண் வரைபடத்திலும் இவருடைய நிலத்துக்கு உட்பிரிவு வரைபடம் வரையப் பட்டு இருக்கும். தனிபட்டாவில் பெயர், நில அளவு, புல எண் உட்பிரிவு, FMB சப் டிவிசன் , ஆகியவற்றில் 1௦௦% தெளிவாக இருக்கும்.

யு.டி.ஆர் பட்டா, நத்தம் நிலவரி திட்டம் -தோராய பட்டா & தூய பட்டா ஏ.டி. கண்டிசன் பட்டா , நில ஒப்படை பட்டா , டி.எஸ்.எல்.ஆர் பட்டா, தூசி பட்டா, ஆகிய 6 பட்டாவும் யாருக்கு எத்தன்மையில் வழங்கபடுகிறது என பிரிக்கப்பட்டு இருக்கிறது . தனிபட்டா கூட்டுபட்டா என்பது பட்டா ஆவணத்தின் தன்மையை பொறுத்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.

=> ப‌ரஞ்சோதி பாண்டியன்  & Tamilnadu Students Association For TN Welfare (facebook)

20 Comments

 • Dhufail

  கூட்டுப் பட்டாவிலிருந்து தனிப் பட்டா பெற முடியுமா ?

   • Raja Justin

    எப்படி என்பதை தெளிவாக விளக்க முடியுமா? வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்க முடியுமா?

  • நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் அரசு தலையாரிக்கு இங்கு பட்டா வழங்கப்படும்? (அவர் தலையாரி அதற்கு முன்.)

   அனுமந்த பட்டா நத்தம் நிலத்திற்கு செல்லம்மா?(அவர்கள் வைத்து இருப்பது அனுமந்த பட்டா)

 • Elaiyaraja

  வணக்கம் எங்கள் ஊரில் 75 வருடமாக அனுபவித்து வரும் இரண்டு சென்ட் நிலத்தை வேறு ஒருவர் ஏடி கண்டிஷன் பட்டாவாக மாற்றி விட்டோம் என கூறுகின்றனர் இதனை உடைத்து நம் பட்டா மாற்ற இயலுமா

  • V2V Admin

   அரசாங்கத்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட நிலத்தின் பட்டாவை மாற்றவே முடியாது.

   பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள் CLICK THIS LINK => https://tinyurl.com/ujuekvu

   1. ஏ.டி கண்டிசன் பட்டா :ஏ.டி.கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதிதிராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டு மனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதிதிராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பர்.

   மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி , பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார்.அப்படி ஒப்படை செய்யும் போது , கொடுக்கும் பட்டா ஏ.டி.பட்டா ஆகும். அது பெரும் பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது.பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனி வட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இருக்கும்.முக்கியமாக மேற்படி இடத்தை பெறுபவர் வேறு யாருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்க கூடாது. விற்றாலும் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும் என்ற கண்டிசன்கள் முக்கியமானதாக இருக்கும்இதே தன்மையில் பயிர் செய்ய நிலமில்லாத ஆதிதிராவிட பழங்குடியின மக்களு க்கு 5௦ சென்டில் இருந்து ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்படும்.

   • Kamalarahgavan

    வணக்கங்கள். சுமார் 70வருடம் குடியிருப்பு இருக்கிறது.வண்டிபாதை என உள்ளது.இதற்கு பட்டா கிடைக்குமா.இத்த இடத்தில். மக்களுக்கு . எந்த சிரமமுமம் இல்லை..

    • V2V Admin

     பொதுச்சொத்து அல்லது பொது பயன்பாட்டுக்கு உரிய இடத்திற்கு சட்டப்படி பட்டா கிடைக்காது

     • V2V Admin

      புறம்போக்கு நிலத்தில் ஏழைபாழைகள் குடியிருந்தால் அந்த நிலத்திறகு அரசாங்கத்தால் வழங்கப்படும் பட்டாவின் பெயர்தான் இலவச பட்டா

    • S.Gayathri

     நீர் நிலைகள் (ஆறு )பக்கத்தில் 25 வருடங்களாக வசித்து வருகிறோம் பட்டா கிடைக்குமா.

    • Selladurai

     நீர் நிலைகள் (ஆறு )பக்கத்தில் 25 வருடங்களாக வசித்து வருகிறோம் பட்டா கிடைக்குமா.

 • குமரகுரு

  குடிபட்டா.
  ரொக்க பட்டா.
  முழுமையான விளக்கம் தரவும்.
  எதிர்பார்க்கிறேன்

 • S KARTHIKEYAN

  அனாதீனம் புறம்போக்கு வீட்டுமனை பட்டா வழங்க என்ன செய்ய வேண்டும்.

 • sankareswari

  வணக்கம்…. என்னுடைய தாத்தா பெயரில் இருக்கும் 3 sent வீடு கட்டப்பட்டு அவரது பெயரில் பட்டா எடுக்க பட்டு உள்ளது… ஆனால் அதை எனது தந்தையும் அவருடன் பிறந்த மற்ற 3 sakothararkalum அவர்களது பெயரில் தனி பட்டா எடுக்காமல் விட்டு விட்டனர்.. இப்போது எனது தாத்தாவும் தந்தையும் அவரது ஒரு அண்ணாவும் இறந்து விட்டனர்…. இப்போது எவ்வாறு தனி பட்டா பெறுவது…. மற்றும் எனது தாத்தா 1960 இல் bank il loan வாங்கி வீடு காட்டியுள்ளாராம் … இப்போது எங்கள் பட்டா அசல் எங்கு உள்ளது என்பதை எவ்வாறு கண்டு பிடிப்பது….எப்படி தனி பட்டா பெறுவது….

 • Nattuthurai

  ஆதிதிராவிட நலத் துறையால் வாங்கப்பட்ட பட்டாவின் காலக்கெடு முடிந்த பிறகு ஆனை பத்திரப்பதிவு செய்வது எப்படி

 • Chandrasekaran

  2006 il dmk arasal kodukkapatta patta entha vagai patta Athan conditions enna Antha nilathai vangalama

 • Raja

  2சி பட்டா இடத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் எங்கள் பெயாில் வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேற்படி அந்த இடத்தினை அரசு கையகப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதா? அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள வீடு எங்களுக்கு ஓர் ஆவணம் ஆகுமா?

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: