முட்டாள்தனம் – பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று கருதுவது
முட்டாள்தனம் – பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று கருதுவது
பெண்கள், தங்களை ஆண்களுக்கு சமம் என்று “முட்டாள்தனமாக”
எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்றே நான் நினைக்கிறேன். ஒருபோதும் பெண்கள், ஆண்களுக்கு நிகரானவர் இல்லை. ஒருபோதும் நிகர் ஆகவும் முடியாது
அதற்கு மாறாக, ஆண்களைவிட “பன்மடங்கு” “உயர்ந்தவர்கள்” பெண்கள்!
நீங்கள் ஒரு பெண்ணிடம் எதையாவது கொடுத்தால், அவள் அதனை “பெரிதாக்கி” சிறப்பாக்கி விடுவாள்
உன் “உதிரத்தை ஓரு துளி”யைக் கொடு, அவள் உனக்கு ஒரு “குழந்தையைத்” தருவாள்.
ஒரு “வீட்டைக்” கொடுத்தால் அதனை அவள் “குடும்பமாக” மாற்றிக் காட்டுவாள்
நீங்கள் “மளிகைப்” பொருட்களைக் கொடுத்தால் அவள் “விருந்து” படைப்பாள்
உன் “புன்னகையை” அளித்தால் அவள் தன் “இதயத்தை” உ கொடுத்துவிடுவாள்
நீ கொடுப்பது எதுவாயினும் அதனை “பலமடங்கு” பெரிதாக்குவது பெண்ணின் குணம்.
எனவே நீ அவளுக்கு “சிறிய அளவில் ஏதாவது தொல்லை” கொடுத்தாயானால் அவள் உடனே அதையே “டன் கணக்கில் உனக்குத் திருப்பிக்கொடுப்பாள்” என்பதை யும் புரிந்துகொள்
(“வில்லியம் கோல்டிங்” என்னும் ஆங்கில நாவலாசிரியர், பெண்களைப் பற்றி சொன்னது.