Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தியேட்டருக்குள் புகுந்து ஆண்களை ஓட ஓட விரட்டி அடித்த‍ பெண்கள் – பரபரப்பு

தியேட்டருக்குள் புகுந்து ஆண்களை ஓட ஓட விரட்டி அடித்த‍ பெண்கள் – பரபரப்பு

தியேட்டருக்குள் புகுந்து ஆண்களை ஓட ஓட விரட்டி அடித்த‍ பெண்கள் – பரபரப்பு

கடந்த ஆண்டு, ஹரஹர மகாதேவகி என்ற திரைப்படமும் கடந்த சில

மாதங்களுக்கு முன்பு வெளியான‌ இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற தமிழ் திரைப்படமும், ஆபாசமா இருந்தன• ஆனால் இந்த இரண்டு படங்களும் பெரு வெற்றி பெற்றன. இப்படங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் காட்சிகளும், வசனங்களும் இடம் பெறும் வகையில் உள்ளன. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகர் விமல் நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ ( Ivanukku Engeyo Macham Irukku )என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், பெண்களை கேலிசெய்யும் வகையில் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஆபாச போஸ்டர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. 

இத்திரைப்படம் மதுரையில் காளவாசல் பகுதியில் உள்ள சண்முகா சினி காம்ப்ளக்சில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது . நேற்று காலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு திரண்டனர் . அவர்கள் தியேட்டருக்குள் சென்று அங்கிருந்த போஸ் டர்களை கிழித்தனர் .

பின்னர் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தியேட்டர் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தியேட்டருக்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை அந்த பெண்கள் சந்தித்து இதுபோன்ற ஆபாச படங்களை தயவு செய்து பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு காலை நேர காட்சி ரத்து செய்யப்பட்டது. படம் பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள் அவசர, அவசரமாக அங்கிருந்து வெளியேறினர்.


#IvanukkuEngeyoMachamIrukku #vimal #AshnaZaveri #IruttuAraiyilMurattuKuthu

Leave a Reply