பாரதி தேசமென்று தோள் கொட்டுவோம்
பாரதி தேசமென்று தோள் கொட்டுவோம்
(2018 ஆண்டு டிசம்பர் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள தலையங்கம்)
வாழ்ந்த காலத்தில் வீழ்ந்திருந்தாலும் வீழ்ந்திருந்த சமுதாயத்தை
தன் பாடல் களால் தூக்கி நிறுத்தியவன் பாரதி.
பிறந்த நாளன்றும், நினைவு நாளன்றும் மட்டும் சடங்குக் காக நினைக்கப்பட்ட பாரதியை ஊர்தோறும் பாரதி உலா மூலம் அடுத்த தலைமுறைக்கு கொண்டுசேர்க்கும் உரத்த சிந்தனைக்கும், ஜதி பல்லக்கு, கவிப்பொழிவைத் தாண்டி கண்காட்சி கலைநிகழ்ச்சிகள் மூலம் பாரதி விழாவை தேசத் திருவிழாவாக மாற்றிக் கொண்டிருக்கும் வானவில் பண்பாட்டு மையத்துக் கும் நெஞ்சு நிமிர்த்தி வீர வணக்கங்களை தெரிவி த்து முதல் மரியாதை தர வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.
எட்டயபுரம் மணிமண்டபத்தில் பாரதி அன்பர்களை பாரதி பிறந்த தினத்தில் ஒன்றிணைக்கும் அனைத்திந் தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் தியாகராஜ ஆராதனை போல் எட்டைய புரத்தில் பாரதிக்கு தமிழா ராதனை நடத்திட அனைத்துத் தமிழ் அமைப்புக்களை இணைக்க அரும்பாடுபட்டு தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் அவர்களுக்கும் பாரதியின் கடைக் கண் பார்வை கட்டாயம் உண்டு.
தனிப்பட்ட அமைப்புகள் எல்லாம் தன்முனைப்போடு தலைசிறந்த பாரதி விழாக்க ளைக் கொண்டாடும்போது ஏன் தமிழக அரசும் இதை அரசு விழாவாக கொண்டாக் கூடாது.
பள்ளியின் இறைவணக்கக் கூட்டங்களில் திருக்குறளும், பாரதியின் சிலவரிகளும் தொடர்ந் து பாடப்படும் வகையில் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். ஆண்டுக்கொரு முறையே னும் அனைத்து பள்ளிகளிலும் பாரதி விழா அரசு விழாவாக கொண்டாடப்பட வேண்டும்.
பாரதி பிறந்த மண்ணுக்கு பள்ளிகள்ஆண்டுக்கொருமுறையாவது மாணவர்களைச் சுற்றுலாவாக அழைத்துச் செல்ல ஆவன செய்ய வேண்டும்.
பாரதி பிறந்த எட்டையபுரத்தில் பன்னாட்டு தமிழர்களும் தமிழ் அமைப்புக்களும் ஒன்றுகூடி கவிதாஞ்சலி, புகழாஞ்சலி, கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் சர்வதேச தரத்தில் (கலைவாணர் அரங்கம் போல்) அரங்கமும் ஏற்படுத்த வேண்டும்.
உரத்த சிந்தனையின் இந்தக் கோரிக்கைகளை எல்லா தமிழ் கால இலக்கிய அமைப்புகளும் தனியாகவோ இணைந்தோ தீர்மானங் களாக்கி அனுப்பிட வேண்டு கிறோம்.
பாரதிதேசமென்று தோள் கொட்டுவதுதான் உரத்த சிந்தனையுட ன் பாரதி தேமென்று தோள் கொட்டியவனுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி.
\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்
திரு.உதயம் ராம் : 94440 11105
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///\///\//\///\//\|
#urathaSindhanai #NamUrathaSindhanai #vidhai2virutcham