Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

TTV தினகரனுக்கு டாட்டா – முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி

( மேலே உள்ள‍ படச் செய்தி – அன்றே தான், டி.டி.வி.தினகரனிடம் விலகப்போவதை சூசகமாக தெரிவிக்க‍த்தான் இப்ப‍டி டாட்டா காட்டினாரோ)

டி.டி.வி. தினகரனுக்கு டாட்டா – மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி

டி.டி.வி. தினகரனுக்கு டாட்டா – முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டி.டி.வி.தினகரனின் வலதுகரமாக

செயல்பட்ட‍வர். இவர் கரூர் மாவட்ட‍த்தைச் சேர்ந்தவர். டி.டி.வி. தினகர‌னுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்முக எனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, செந்தில் பாலாஜி சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோரும் தி.மு.க.வில் சேர்ந்தனர். அவர்களை வரவேற்று உறுப்பினர் அட்டைகளை மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

கருணாநிதியின் சிலை திறப்புவிழா முடிந்தபிறகு, கரூரில் நடைபெறவுள்ள செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் இணைப்பு விழா தி.மு.க.விற்கு வலிமை சேர்க்கு ம் விதமாக இருக்கும் என தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் சிலர் தெரிவித்தனர்.

க‌டந்த சில நாட்களாகவே செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுபற்றி செந்தில் பாலாஜி உறுதியான தகவல் களை தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த டி.டி.வி. தினகரன், அ.ம.மு.க.வை சேர்ந்த தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் ரெங்கசாமி, அரூர் முருகன், சோளிங்கர் பார்த்திபன் உள்ளிட்டோர் செந்தில் பாலாஜியை சமாதா னப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். எனினும் அது பலன் அளிக்கவில்லை.

#DMK #MKStalin #SenthilBalaji, #Ammk #DravikaMunnettraKazhagam #AmmaMakkalMunnettraKazhagam #Stalin #செந்தில்பாலாஜி #திமுக #முகஸ்டாலின்  ஸ்டாலின் #அதிமுக #டிடிவிதினகரன் #திராவிடமுன்னேற்ற‍க்கழகம் #ஸ்டாலின்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: