நல்ல வருவாய் தரும் சுயதொழில் தேனீ வளர்ப்பு – விவசாயம்
நல்ல வருவாய் தரும் சுயதொழில் தேனீ வளர்ப்பு – விவசாயம்
தேனீ வளர்ப்பு விவசாயம் சார்ந்த வருவாய் தரும் சுயதொழில்
உழவர்களுக்கு நேரடியாக பயன்தரும் ஒன்று தேனி வளர்ப்பு தேனீக்களை
வளர்ப்பதன் மூலம் அந்த பகுதியில் மகரந்த சேர்க்கை சிறப்பாக நடைபெறும்.
தேனீக்கள் வளர்க்க சரியான தருணம் இதுதான்….
நிறைய நிலம் வைத்திருக்கும் நண்பர்களே அதிக அளவு மரங்கள் மற்றும் செடிகள் வளர்க்கவும். மொட்டை மாடி வீட்டில் வசிப்பவர்களே தயவுசெய்து பூஞ்செடிகளை அதிகளவில் வளர்க்க வேண்டும். ஏனெனில் தேன் ஈக்கள் அழியும் நிலையில் உள்ள து. ஒவ்வொரு வருடமும் போதிய தேனீக்கள் இல்லாமல் இந்தியாவில் 3000 கோடி ரூபாய் மகசூல் இழப்பு ஏற்படுகிறது என வல்லுனர்கள் கணக்கிட்டுள்ளார்கள். தேனீக்கள் இல்லையெனில்மகரந்த சேர்க்கை இல்லாமல் தாவரங்கள் அழியும் நிலை ஏற்படும்.
ஒவ்வொருவர் வீட்டின் மொட்டை மாடியில் அல்லது ஒரு தோட்டத்தில் தேனீ ( #Bee ) வளர்க்கும்போது அந்த தேனீக்கள் அங்கு உள்ள பூக்களில் மதுரம் எடுக்கிறது. அப் பொழுது ஆண் பூவிலுள்ள மகரந்தம் தேனீயின் உடம்பில் உள்ள ரோமத்தில் ஒட்டிக் கொள்கிறது, அடுத்து அது பெண் பூவில் சென்று அமரும்போது அதன் ரோமத்தில் இருக்கும் மகரந்தம் பெண் பூவில் உள்ள சூல்முடியை சென்று சேர்வதுதான் மகரந்த சேர்க்கை என்கிறோம்.
தேனீ வளர்ப்பதினால் மகரந்த சேர்க்கை மூலம் 40% முதல் 80% உற்பத்தி அதிகரிக் கும் .அயல் மகரந்த சேர்க்கையில் இந்தியாவில் 66.6% பயிர்கள் தேனீக்களைத்தான் நம்பியிருக்கிறது. தமிழ்நாட்டை பொருத்தவரையில் டிசம்பரில் இருந்து மார்ச்வரை அதிகமான பூக்கள் பூக்கும் காலமாக உள்ளது.
தேனீ வளர்ப்பதின் மூலம் மகசூல் அதிகமாகும் பயிர்கள்
பழவகைகள்:
ஆப்பிள், எலுமிச்சை , திராட்சை , கொய்யா, சப்போட்டா, மா, பப்பாளி, முந்திரி, பேரிக்காய், பிளம்ஸ் , லிச்சி , பாதாம்.
எண்ணெய் வித்துக்கள்:
சூரியகாந்தி, எள், நிலக்கடலை, கடுகு , தென்னை மரம்
காய்கறி பயிர்கள்:
கேரட், வெள்ளரி, வெங்காயம், முட்டைகோஸ், காலி பிளவர், நூல்கோல், முள்ளங்கி.
பணபயிர்கள்:
பருத்தி , இரப்பர்
இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்.
அம்ருதா தேன் பண்ணை சேலம் 9600312579
#Bee #SelfEmployee #SelfEmployment #Agriculture