வரலட்சுமியால் பயத்தில் நடிகை சாய் பல்லவி
வரலட்சுமியால் பயத்தில் நடிகை சாய் பல்லவி
தனுஷ் நடித்து பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான மாரி படத்தின்
இரண்டாம் பாகமாக மாரி 2 வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த மாரி 2 படத்தில் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சாய் பல்லவி ஹிரோயினாக நடித்தாலும் வரலட்சுமிக்கு படத்தில் வெயிட்டான ரோல் இருக்கிறதாம்.
ஏற்கனவே, சண்டக்கோழி 2, சர்கார் போன்ற படத்தில் வில்லியாக நடித்து அந்த படத்தில் நடித்த ஹீரோயினுக்கு வேலை இல்லாமல் செய்துவிட்டார். படத்தை பார்த்த அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்தார். இந்நிலையில் மாரி 2 படத்திலும் அவருக்கு வெயிட்டான ரோல் என்பதால் தனது கேரக்டர் டம்மியாகி விடுமோ என்ற பயத்தில் உள்ளாராம் சாய் பல்லவி. ஏற்கனவே சாய் பல்லவியை கலாய்த்து பல மீம்ஸ் வெளியான நிலையில், பேருக்குதான் ஹீரோயின்: மாரி 2 படத்தால் கலக்கத்தில் சாய் பல்லவி கவலை அடைய செய்துள்ளதாம். மாரி 2 படத்தில் தனுஷை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக நடித்துள்ளார் சாய் பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.
#sarkar #sandakozhi #maari #mari #SaiPallavi #Varalakshmi #VaralakshmiSarathkumar #Danush #premam