Friday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்கள், கண்டிப்பாக‌ சுமக்க வேண்டிய‌ சுகமான சுமைகள் – வாழ்வியல் ரகசியம்

ஆண்கள், கண்டிப்பாக‌ சுமக்க வேண்டிய‌ சுகமான சுமைகள் – வாழ்வியல் ரகசியம்

ஆண்கள், கண்டிப்பாக‌ சுமக்க வேண்டிய‌ சுகமான சுமைகள் – வாழ்வியல் ரகசியம்

சுமை என்றதும், கனமான‌ பொருட்களோ அல்ல‍து குடும்ப பொறுப்புக்களோ தான் உங்கள் நினைவுக்கு வரும். ஆனால்

உண்மையான சுமை என்றால் அது உணர்வுகள்தான். அந்த சுமைகளை சுமக்கும் போது மனத்திற்குள் தோன்றும் ஒரு வித நெகிழ்ச்சி கலந்த மகிழ்ச்சி, அதுவே உண்மையான சுகமான சுமை ஆகும். இதோ அதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

ஒரு ஆண், அவனது வாழ்நாளில் சுமக்க வேண்டிய சுகமான சுமைகள் ( Sugamana Sumaigal ):

1) திருமணம் முடித்த ஆண், மனைவியின் மலர்முகம் அவனது மார்பில் பதியும் போது உண்டாகும் சுமை, சுகமான சுமைதானே!

2) அந்த சுகமான சுமைதனை தாங்கியதன் விளைவாக அவன் மனைவி கருத்த‍ரித்து பெற்ற குழந்தையை, அந்த ஆண் தனது மார்பில் வைத்து விளையாடும் போது, அந்த குழந்தையின் சுமை, சுகமான சுமைதானே!

3) பிறந்த அந்த குழந்தையின் தனது கைகளால் தூக்கும் அந்த ஆணுக்கு அது சுகமான சுமைதானே!

4) அக்குழந்தை தவழும் போது அதனை கைகளால் தூக்கி மார்பில் அதன் கால்கள் பதிக்கும்போது அதன் பிஞ்சு பாதம் பட்ட‍ சுமை, அந்த ஆணுக்கு சுகமான சுமை தானே!

5) அக்குழந்தை வளர்ந்து நடைபழகும்போது அந்த பிஞ்சு கால்கள் வலிக்குமே என்று அந்த ஆண், தன் தோளிலும் மார்பிலும் தூக்கிச் சுமக்கும்போது உண்டாகும் அந்த‌ சுமை, அந்த ஆணுக்கு சுகமான சுமைதானே!

6) அந்த குழந்தை வளர்ந்து, உரிய வயதில் திருமணம் முடித்து அவன் மூலமாக பெறப்படும் பேரக் குழந்தை, தன் மார்பில் துள்ளி விளையாடும்போது அந்த சுமை, சுகமான சுமைதானே!

7) அனைத்து கடமைகளையும் முடித்த திருப்தியில் அந்த ஆண் மரணித்து விட்டால், அவனது பூத உடலை சுமக்கும் அவனது பிள்ளைகளுக்கும், உறவுகளுக்கும் அது துக்க‍மாக இருந்தாலும் ஒரு விதத்தில் அந்த சுமைகூட அவர்களுக்கு சுகமான‌ சுமைதானே!

மேற்கண்ட ஏழு சுகமான சுமைகளை சுமந்த ஆண்கள், உண்மையிலேயே அவர்கள் அதிர்ஷ்டசாலிகளே…

இந்த ஏழு சுகமான சுமைகளை சுமக்காத ஆண்கள், உண்மையிலேயே அவர்கள் துரதிஷ்டசாலிகளே…

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 98841 93081


#SugamanaSumaigal #Sugamana #Sumaigal #சுகமானசுமைகள் #சுகமானசுமை #சுகமான #சுமைகள் #vidhai2virutcham 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: