Tuesday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக?

நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக?

நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக?

நேரம் அறிந்து சரியான தருணத்தில் எடுத்த‍ வேலைகளை செம்மையாக

செய்து முடிக்க‍ வேண்டும் என்பதற்காகத்தான் நாம் கைக்கடிகாரம் கட்டுகிறோம். ஆனால் கைக்கடிகாரம் கட்டுவதில்லை.

நான் ஏன் கைக்கடிகாரம் கட்டுவதில்லை? கல்லூரியில் படிக்கும்போது எல்லா மாணவர்களைப் போல் எனக்கும் விதவிதமான கைக்கடிகாரம் கட்ட வேண்டும் என்று ஆகச உண்டு.அதன் பின்னர் வாரத்தின் 6 நாட்களிலும் கைக்கடிகாரங்கள் மாறி மாறி கட்டிக்கொண்டு சென்ற அனுபவம் உண்டு.

படிப்பு முடிந்ததும் வேலை செய்யும் சமயத்தில் கைக்கடிகாரம் கட்ட ஆரம்பித்தேன். அந்த கைக்கடிகாரம் என் தந்தை வாங்கி கொடுத்தது. அந்த கைக்கடிகாரம் ஒரு கோயில் திருவிழாவில் கைநழுவி விழுந்தது. எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. உடனே என் தந்தைக்கு எழுதிய கடிதத்தை படித்து என் தந்தை ரொம்ப வருத்தமாக உள்ளது என தெரிவித்து இனிமேல் உஷாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.என் கடிதத்தை இன்னும் பத்திரமாக வைத்துக் கொண்டு இருக்கிறார். பிறகு நான் ஒரு கைக்கடிகாரம் வாங்கி அலுவலகத்திற்கு கட்டிக் கொண்டு போனேன் ‌.ஆனால் அந்த தொலைத்த கைக்கடிகாரம் அடிக்கடி நினைவுக்கு வரும்.

இந்த சமயத்தில் 8/11/2008 அன்று ஒரு மொபைல் வாங்கினேன் . அதற்கு அடுத்த நாளிலிருந்து இன்றுவரை கைக்கடிகாரம் கட்டுவதில்லை. நேரம் பார்க்க மொபைல் இருக்கும் போது கைக்கடிகாரம் எதற்காக? ஆனால் என் நண்பர்கள் நான் கல்லூரி யில் படிக்கும்போது செய்த அந்த நிகழ்ச்சியை பற்றி அடிக்கடி பேசி நீ இப்போது மாறிவிட்டாய் என்று கலாய்ப்பார்கள்.

=> பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307

#நேரம்#மொபைல் #கைக்கடிகாரம் #எதற்காக #கை #கடிகாரம்  #கைக்கடிகாரம் #Watch #Watches #Wrist #Mobile #Cell #time #Date #vidhai2virutcham 

Leave a Reply

%d bloggers like this: