மானம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? – என்னடா இது ஆண்களுக்கு வந்த சோதனை
மானம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? – என்னடா இது ஆண்களுக்கு வந்த சோதனை
ஜீ தொலைக்காட்சி (ZEE TV Tamil )யில் காமெடி கில்லாடீஸ் என்ற
நகைச்சுவை நிகழ்ச்சி வாரந்தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக நடிகை தேவதர்ஷினி, நடிகர் பாலசரவணன் மற்றும் நடிகை நந்தினி (மைனா) ஆகியோரும், மகேஸ்வரி மற்றும் கமல் ஆகிய இருவரும் தொகுப்பாளர் களாக உள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், தங்களது திறமைகளை காட்டி மக்களை சிரிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.
கடந்த வாரநிகழ்ச்சியில், அபினேஷ் என்ற போட்டியாளர், நடித்துக் கொண்டிருந்த போது வேட்டியை மடித்து, அதாவது நம்ம ராஜ்கிரண் பாணியில் தொடை தெரியும் அளவுக்கு கட்டினார். உடனே நடுவராக இருக்கும் மைனா எனும் நந்தினி அந்த அபினேஷை பார்த்து, “டேய் வேட்டியை கீழே இறக்குடா” என்றார். அதன்பிறகு அவர் வேட்டியை கீழே இறக்கி மடித்து கட்டினார்.
நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். ஒரு ஆண், வேட்டியை சற்று தூக்கி மடித்து கட்டியதை அதனை கண்டிக்கின்றனர். இது தவறு என்று சொல்ல வில்லை. ஆனால் இதே ஒரு பெண், மிக குறைந்த அளவு துண்டுபோன்ற ஆடையை அதாவது மினி ஸ்கர்ட் அணிந்து கொண்டு, திரைப்படங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும், மெகா தொடர்களிலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கொஞ்சமும் வெட்கமின்றி அணிந்து கொண்டு வருகிறார்களே இதனை கண்டிக்க யாரும் முன்வருவதில் லையே அது ஏன்?
மானம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? பெண்களுக்கு கிடையாதா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
ஒரு பெண், தொடை தெரியும் அளவுக்கு ஆடை அணிந்து வந்தால் அது பேஷன்
ஒரு ஆண், தொடை தெரியும் அளவுக்கு வேட்டியை மடித்துக் கட்டினால் அது அசிங்கமா?
மானம் என்பது ஆண்களுகு மட்டும்தானா என்னடா இது ஆண்களுக்கு வந்த சோதனை என்ற கேள்வி ஒவ்வொரு ஆணுக்கும் எழுகிறது.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 9884193081