Monday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்

ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்…

ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால். . .

1993ல் நடந்த ஒரு நிகழ்ச்சி இன்னும் நினைவில் உள்ளது. நவம்பர் 1993-ல் என் சகோதரி குடும்பத்துடன் அம்பத்தூரில் நடந்த ஒரு விசேஷத்தில் கலந்து கொண்டு பிறகு வெளியூர் செல்ல 147 சி பேருந்தில் தி.நகர் சென்றார்கள். அவர்கள் பேக்கில் ஒரு சின்ன ரிஸ்ட்பேக்கில் நகைகள் வைத்து எடுத்து போயிருக்கிறார்கள். தி. நகர் வீட்டில் சென்று பார்க்கும் போது பேக்கில் உள்ள நகை ரிஸ்ட் பேக் காண வில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அப்போது மொபைல் கிடையாது ஏன் லேண்ட் லைன் கூட கிடையாது. நேராக என் வீட்டில் வந்துதேட கிடைக்கவில்லை. பிறகு அம்பத்தூர் காவல் நிலையம் ( #Ambattur #PoliceStation ) சென்று புகார் கொடுத் தால் வாங்கவில்லை. பேக் அண்ணா ஆர்ச்சிலிருந்து அருண் ஹோட்டல் ( #Arun Hotel from AnnaArch) போவதற்குள் தொலைந்து இருக்கும் என்று தெரிவித்து அமைந்தகரை ( #Aminjikarai ) காவல் நிலையத்தில் புகார் செய்ய அறிவுறுத்தல். பிறகு என் நண்பர் சென்னை போலீஸ் கமிஷனர் ( #Chennai #Police #Commissioner ) அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் மூலம் நான் புகார் கொடுக்க சென்றேன். காவல் நிலைய அதிகாரி 4 ஸ்கொயர் பேப்பர், 10 பால்பாயிண்ட் பேனா கேட்டார். நான் சரி இதெல் லாம் வாங்க பணம் கேட்டபோது என்னை முறைத்து நீங்கள் தான் வாங்கி வர வேண்டும் என்றார். நான் முடியாது என்று சொல்லிவிட்டு ஆபீஸ் போய் என் நண்பரிடம் மறுபடியும் புகார் பிறகு இணை ஆணையர் காவல்துறை தொலை பேசி மூலம் தகவல் கொடுத்த பிறகே புகார் வாங்கப்பட்டது. ஆனால் இன்று வரை நகை கிடைக்கவில்லை. இதுதான் காவல்துறை அலட்சியம். ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால் என்ன அர்த்தம்.

வருத்தத்துடன்
பாரதிராஜன்
பெங்களூரில் இருந்து 9710838307

Leave a Reply