நகங்களில் மஞ்சள் கறையா? இதோ இதை டிரைப் பண்ணுங்க
நகங்களில் மஞ்சள் கறையா? இதோ இதை டிரைப் பண்ணுங்க
பெண்களின் கால்களுக்கு அழகு சேர்ப்பது கால்விரல்கள்தான். அந்த
கால் விரல்களுக்கு அழகுசேர்ப்பது நகங்கள் தானே! (இந்த மருத்துவம் ஆண்களு க்கும் பெண்களுக்கும் பொதுவானது) அந்த நகங்கள், மஞ்சள் கறை படிந்து அசிங்க மாக இருந்தாலும், உங்கள் கால்களின் அழகை ஒட்டுமொத்தமாக சிதைத்து விடும். ஆகவே இதனை போக்க ஒரு எளிய வீட்டுக் குறிப்பு பார்ப்போம்.
வாய் அகண்ட பிளாஸ்டிக் டப்-ஐ எடுத்து அதில், போதுமானளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் அதன்பிறகு தேவையான அளவு எலுமிச்சை பழங்கஙளை எடுத்து அவற் றின் சாற்றை பிழிந்து அதில் கலந்துவிடவேண்டும்.
அதன் பிறகு உங்கள் பாதங்கள் முழுவதுமான தண்ணீரில் மூழ்கும் அளவுக்கு உள்ளே வையுங்கள். சுமார் 25 நிமிடங்கள் வரை நன்றாக ஊற விடுங்கள். அதே மாதிரி பிழிந்த எலுமிச்சைகளைக் கொண்டு உங்கள் கால் நகங்களில் நன்றாக தேய்க்க வேண்டும்.
15 நிமிடங்கள் கழித்து, கால்களை வெளியே எடுத்து நன்றாக அதிக சூடு இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இதைப்போலவே ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாமல் செய்து வந்தால் நாளடைவில் உங்கள் நகங்க ளில் இருந்த மஞ்சள் கறை முற்றிலுமாக மறைந்து நகங்கள் அழகாகும். நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்.
மலர்விழி malar16@rediffmail.com
To add beauty to women’s legs is toes. The nails are beautiful! (This medicine is common to both males and females) Although the nails are yellow and stingy, the charm of your legs will break down altogether. So let’s look at a simple home reference. Take a mouthful plastic dip and pour enough water into it and then take the required amount of lemon juice and squeeze the juice. Then put your feet in the water to drown in the water. Leave it for about 25 minutes. You should rub your nails well with the same lemon juice. After 15 minutes, take out the feet and wash it off with warm water, which is not too hot. Ifyou do it regularly every Sunday, the nails look fair in your nails and the yellow stains completely overwhelmed. If the nails are fair, your toes are beautiful.
#Nail #Lemon #Shine #Yellow #beauty #vidhai2virutcham #Toe