Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இடைத்தேர்தல் – திருவாரூரில் ஜனவரி 28ல்

இடைத்தேர்தல் – திருவாரூரில் ஜனவரி 28ல்

இடைத்தேர்தல் – திருவாரூரில் ஜனவரி 28ல்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வரும்,

திருவாரூர் ( #Thiruvarur ) தொகுதியின் சட்ட‍மன்ற உறுப்பினருமான கலைஞர் திரு. மு. கருணாநிதி அவர்க‌ள், உடல்நலிவுற்று, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள‍ காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தால் இந்நிலையில்தான் கடந்த ஆகஸ்டு மாதம் 7 தேதி செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார்.


இதனால், இந்த திருவாரூர் தொகுதிக்கு இன்று முறைப்படி தேர்தல் அறவிக்க‍ப்ப‍ட் டுள்ள‍து. 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ( #ByElection ) ந‌டைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 10 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை 11 ஆம் தேதி நடை பெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜனவரி 14 ஆம் தேதி கடைசி நாள். ஜனவரி 31ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியா கியுள்ள‍து. இதனால் தேர்தல் நன்ன‍டத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிற து. இதுகுறித்தான‌ தேர்தல் அறிவிக்கை முறைப்படிவரும் 3ஆம்தேதி வெளியிடப்ப டும் என்று தேர்தல் ஆணையத் தரப்பு தெரிவித்துள்ள‍து.

Leave a Reply