பொங்கல் விருந்து படைக்க காத்திருக்கும் திரை நாயகர்கள்
பொங்கல் விருந்து படைக்க காத்திருக்கும் திரை நாயகர்கள்
பொங்கல் பண்டிகை என்றாலே புதிய திரைபடங்கள் வெளியீடு. வரும் பொங்கல் அதற்கு
விதிவிலக்கு அல்ல. “பேட்ட மற்றும் விஸ்வாசம் தணிகை சான்றுகளைப் பெற்று வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. ரஜினி அவர்களின் “பேட்ட” ஏற்கனவே முன் னோட்டத்தை வெளியிட்டு அது ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வை யாளர்களால் பார்க்கப்பட்டு உள்ளது. திரையில் ரஜினியை கண்ட அனவைரும் அவரின் இளமை தோற்றத்தை நன்கு ரசித்ததாக வரும் விமர்சனங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
கார்திக் சுப்புராஜ் அவர்களின் மிக பெரிய வித்தியாசமான படைப்பாக “பேட்ட” இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னோட்டத்தில் ரஜினி, அவர் பேசும் வசனங்கள், உடல் அசைவுகள், புதிதான தோற்றம் குறிப்பாக கடைசியாக அவர் பேசும் ஸ்வீட் சாப்பிட … ரசிகர்களை சுண்டி இழுக்கும் ரகம். சூப்பர்ஸ்டார் என்ற எழுத்துகள் தோன்றுவதும் ஒரு காட்சி பேழை.
சன் பிக்சர்ஸ் ( #SunPticures ) இந்த படத்தை ஜனவரி 10 அன்று வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களின் விஸ்வாசம் படமும் தணிக்கை சான்றிதழ் பெற்று பொங்கல் அன்று திரைக்கு வர தயாராக உள்ளது. படத்தின் முன்னோட்டம் இன்று டிசம்பரில் வெளியாகிறது. பாடல்கள் எல்லாம் நன்கு ரசிக்கப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையிட தயாராக உள்ளது. ( Petta, ajith, rajini, viswasam )
பொங்கல் அன்று இருபெரும் நட்சத்திரங்களின் படங்கள் மோதுவது ஒரு பேசும் பொருளாகவே மாறிவிட்டது. இரண்டு படங்களும் சம அளவில் திரை அரங்குகளில் வெளியிட தீர்மானிக்கபட்டுள்ளது. திரை வல்லுனர்கள், இதை கடினமான போட்டியாக கருதினாலும் இரண்டு படங்களும் நல்லதொரு வசூல் சாதனை படைக்கும் என்றே கருதுகிறார்கள்.
படங்கள் வெளியாகி ஒரே வாரத்திலே எந்த படம் வசூலில் முந்துகிறது என்பதை பொறுத்தே வெற்றிப் படமாக கருதப்படும். கடந்த வருடங்களில் தமிழ் திரையுலகம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து மீண்டு வந்தாலும் புதிய வருடம் ஒரு வெள்ளி கீற்றை அளிக்கும் என்று நம்புவோமாக!
மகாதேவன் 98404 29811 itsmahadevan2009@gmail.com