சிவாஜியுடன் நான் . . . – அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே
சிவாஜியுடன் நான் . . . – அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே
உலக மக்களை தனது அற்புத நடிப்பால் கவர்ந்திழுத்தவர் நடிப்பின்
அகராதி, திரையுலகச் சக்கரவத்தி, நடிகர் திலகம், சிவாஜி கணேசன் ஒருவரே. அவரது ரசிகர்களாக எங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் இருப்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். சிவாஜி கணேசன் நடித்த படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்து விடுவோம். என் சித்தப்பா பாபு. அவர் கிராமம் இருந்த ஊரிலிருந்து சுமார் 60 கி.மீ போக வர காஞ்சிபுரம் வந்து சினிமா பார்ப்பது வழக்கம். பாபு சினிமா பார்க்க எங்களுக்கு முன் வரிசையில் நின்று கொண்டு இருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்திலும் உறுப்பினர். திரிசூலம் படம் கோவையில் முதல் நாள் முதல் ஷோ பார்க்க போனேன். இடமேஇல்லை அதன் பின்னர் தனி சேர் போட்டு உட்கார்ந்து படம் பார்த்தேன். அவர் நடித்த பழைய திரைப்படங்கள் போட்டி போட்டு பார்ப்போம்.
கெளரவம் திரைப்படம் பார்த்து வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களிடம் அந்த படம் பற்றி பேசி இருக்கிறேன். தவிர சிவாஜி அவர்கள் நடித்த படங்களின் இயக்குனர்கள், கவிஞர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோரை பார்த்து பேசி இருக்கிறேன். நான் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் போது கல்லூரியில் நடைபெறும் விழாக்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள திரு. சிவாஜி கணேசன் அவர்களை, நானே யேரில் போய் அழைத்து வருவேன். மேலும் அந்த மான் காதலி திரைப்படம் வந்த பிறகு அவருடன் இணக்கம் அதிகமானது.
பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307