Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாட்டியா? கொக்கா?

பாட்டியா? கொக்கா?

பாட்டியா? கொக்கா?

என் அம்மாவின் அப்பா அதாவது என் பாட்டனார் வாலாஜாபாத் என்ற

கிராமத்தில் உள்ள மாசிலாமணி முதலியார் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.ஆனால் அதற்குரிய ஓய்வூதிய பலன்களை பெறவில் லை ஏனெனில் பள்ளி, Government Aided. பிறகு ஒரு வழியாக ஓய்வூதியம் சம்பந்தப் பட்ட பேப்பர்களில் கையெழுத்து போட்டு அனுப்பிவைத்தார். அவர் ரொம்ப நாளாக உடல் நிலை சரியில்லை படுத்த படுக்கையில் இருந்து வந்தார். அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு பள்ளியில் இருந்து வந்தவர்கள் பேப்பரில் கையெழுத்து போடக் கேட்க அவரால் முடிய வில்லை.ஒய்வூதியம் பெறாமலே காலமானார். இது நடந்தது 1971ஜூலை மாதம் .

அதன் பின்னர் என் பாட்டிக்கு குடும்ப ஒய்வுதியம் ரூபாய் 30- மட்டுமே என்று மாநில கணக்காயர் அலுவலகத்தில் இருந்து பிப்ரவரி, 1973 வரை ஆணை வந்தது. நான் அப்போது கல்லூரி மாணவன். என் பாட்டி, ஓய்வூதியம் பெறும் சமயத்தில் மாதா மாதம் நடந்து போய் பென்ஷன் பெற்று வருவார்.

ஜனவரி மாதம் பென்ஷன் வாங்கி வந்து, என்னிடம் டிரஷ்ஷரியிலிருந்து ஒரு பேப்ப ரில் கையெழுத்து வாங்குகிறார்கள் என்ன என்று தெரிய வில்லை என்றதும் நான் போய் டிரஷ்ஷரி ஆபீசரை கேட்டதும் அது விதவைகள் மறுமணம் செய்து கொள்ள வில்லை என்று சான்றிதழ் என்றார். என் பாட்டிக்கு வயது 65. இந்த விவரம் அவரிட ம் சொல்லாமல் வழக்கமான நடைமுறை என்று சொல்லி சமாதானப் படுத்தினேன்.

ஆனால் என் போதாத காலம் அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் என் பாட்டி விசாரிக்க அவள் உண்மையைப் போட்டு உடைத்து விட்டாள். மறுநாள் காலை என் பாட்டி தாலுகா ஆபீஸ் செல்வதற்குள் நான் சீக்கிரம் போய் அதிகாரி யிடம் விஷயத்தை சொல்லி, என் பாட்டிக்கு பென்ஷன் இன்னும் ஒரு மாதம் தான் என்று சொல்லி இம்மாதம் முதல் கையெழுத்து வாங்க வேண்டாம் என்று சொல்லி ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து காண்பிக்க சொல்லி ஒரு வழியாக அதிகாரியை சமாளித்து விட்டேன். பாட்டி அதே போல் நேராக அதிகாரியிடம் விஷயத்தை கேட்க அவர் நான் சொல்லிக்கொடுத்த மாதிரி சொல்லி சமாளித்தார். பாட்டி அந்த பேப்ப ரை கேட்க, இது அரசாங்க பேப்பர் என்று சொல்லி சமாளித்தார் அதிகாரி. இந்த விஷயத்தை நான் சரியாக சொல்ல வில்லை என்று எனக்கு கோடி அர்ச்சனை விழுந்தது தனிக்கதை இப்போதும் என் நினைவில் உள்ளது.

பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307

#GrandMother #GrandMa #Paati #OldLady #Pension #பாட்டி #ஓய்வூதியம் #மூதாட்டி 

Leave a Reply