எல்லை தாண்டிய தொடர் பயம் – விபரீத விளைவுகளுக்கு வித்திடும் என்பது உங்களுக்கு தெரியுமா
எல்லை தாண்டிய தொடர் பயம் – விபரீத விளைவுகளுக்கு வித்திடும் என்பது உங்களுக்கு தெரியுமா
பயம் என்ற உணர்வு மனிதனுக்கு கட்டுப்பாட்டினைத் தரும். கடமையை ஒழுங்காய்
செய்யும். நல்ல ஒழுக்கத்தினைத் தரும். ஆனால் எல்லைகளைத் தாண்டிய பயம் மனித வாழ்வினை அழித்து விடும். தொடர் பயம் என்பதே ஒரு நோய்.
இந்த தொடர் பயத்தால்
* நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
* இருதய பாதிப்பு ஏற்படும்.
* ஜீரண உறுப்புகளில் பிரச்சினை ஏற்படும்.
* குடல் பாதிப்பு அதிகமாய் இருக்கும்.
* பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு பாதிக்கப்படும்.
* வயதுக்கு மீறிய மூப்பு தோற்றம் ஏற்படும்.
* இளவயதிலேயே இறப்பு ஏற்படும்.
* மறதி அதிகமாகும்.
* சோர்வு ஏற்படும்.
* மன உளைச்சல் அதிகமாகும்.
* உலகமே பயமானதாகத் தோன்றும்.
* உடல், நோய் பற்றிய பயம் எப்போதும் இருக்கும்.
* வெளி உலகத்தோடு பழக முடியாது.
* தோற்றமே மாறி விடும்.
* அன்றாட பணிகளை செய்ய இயலாது.
* இருதய துடிப்பு மிக அதிகமாக இருக்கும்.
* தசைகள் வலுவிழந்து இருக்கும்.
* மிக அதிக வியர்வை இருக்கும்.
* வாய் வறண்டு இருக்கும்.
* அதிக மூச்சு வாங்கும்.
இத்தனை பாதிப்புகள் தரும் பயத்தினை தூக்கி எறியுங்கள்.
=> ம்மலர்