Wednesday, November 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சட்ட‍மன்றத்தில் 03-01-2019 இன்று

சட்ட‍மன்றத்தில் 03-01-2019 இன்று

சட்ட‍மன்றத்தில் 03-01-2019 இன்று

நாளது 3 ஜனவரி ஆகிய‌ இன்று, கூடிய சட்டமன்றம் பல்வேறு

தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடந்தேறியது.  குறிப்பாக தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்வராகவும் எல்லா சட்டமன்ற தேர்தல்களும் வெற்றியை பெற்ற கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் இரங்கல் உரையை முதலில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் வாசித்தார், அதில் எல்லாரையும் தனது சாதுர்ய மற்றும் நகைச்சுவை பேச்சால் கவர்ந்தவர் என்று குறிப்பிட்டு, தன்னை பற்றியும் முரசொலி பத்திரிகையில் பச்சை தமிழன் என்று குறிப்பிட்டு சொன்னதையும் சுட்டி காட்டினார்.

அவரது தமிழ் புலைமை, கவிதை, உரைநடை அனைவரையும் கவர்ந்தது என்றால் அது மிகையல்ல என்றார். அவர் அண்ணாவின் அருமை தம்பியாகவும் விளங்கி னார் என்றும் குறிப்பிட்டார். கட்சி வேறுபாடு இருந்தாலும் அவரை புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி இருவரும் விரும்பினார்கள்.

தமிழ்நாடு முதல்வர் தனது உரையில் மாணவ பருவத்து நண்பர்களை வைத்தே ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது தமிழ் எல்லோரையும் ஈர்ப்பதாக இருந்தது. அவரது புகழ் என்றும் நிலைத்து இருக்கும் என்றார்.

திமுகவை சேர்ந்த எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், தனது உரையின் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக மாறினார். தான் நோய்வாய்பட்டபோது கலைஞர் தன்னை அன்புடன் கவனித்ததை கண்ணீருடன் நினைவு கூர்ந்து எனது மரணத்தை கலைஞர் பார்ப்பார் என்று நான் நினைக்கையில்,அவரது மரணத்தை நான் பார்க்கும்படி செய்துவிட்டு போய் விட்டாரே என்று சொல்லிவிட்டு அழுதார், இதனை கண்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவரை ஆசுவாசபடுத்தி அமர செய்தார். இது உணர்வு பூர்வமான ஒரு நிகழ்வாக அனைவராலும் பார்க்கப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும், நெல் ஜெயராமன், ஐராவதாம் மகாதேவன், எழுத்தாளர் பிரபஞ்சன், கஜா புயலால் உயிர் நீத்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவை நிகழ்ச்சி எதுவும் நடை பெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

=>மகாதேவன் கைபேசி- 98404 29811 – 8072358178

#Tamilnadu #Assembly #Kalaignar #Karunanidhi #OPanneerselvam #EdapadiPalanichamy #vidhai2virutcham #vajpayee #துரைமுருகன் #ஸ்டாலின் #சட்டமன்றம்

Leave a Reply