Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சில்லறை பிரச்சினை – இடமில்லை

சில்லறை பிரச்சினை – இடமில்லை

சில்லறை பிரச்சினை – இடமில்லை

இது நடந்தது 1975ஆம் ஆண்டு ‌‌‌அப்போது என் இளவல், காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில்

11ஆம் வகுப்பு படித்து பின்னர் சென்னைக்கு வந்து கல்லூரியில் சேர் முடிவு செய்தார்.

நான் அவனுக்கு 3 கல்லூரிகளில் விண்ணப்பம் வாங்க முடிவு செய்து முதலில் மாம்பலத்தில் இருந்து மீனம்பாக்கம் சென்று ஜெயின் கல்லூரியில் விண்ணப்பம் வாங்கி, பிறகு அங்கிருந்து நேராக சேத்பட் சென்று பச்சையப்பன் கல்லூரியில் அடுத்து நுங்கம்பாக்கம் வரை நடந்தே சென்று இலயோலா கல்லூரியில் படிவம் வாங்கி நுங்கம்பாக்கம் ரெயில்வே கவுண்டரில் மாம்பலம் டிக்கெட் வாங்க வேண்டும்.

டிக்கட் விலை 30 பைசா கையில் இருந்தது 25 பைசாவும் ரூபாய் 1,00/ மட்டுமே. அதாவது மாம்பலத்தில் இருந்து மீனம்பாக்கம் டிக்கெட் 40 காசு , மீனம்பாக்கத்திலி ருந்து சேத்பட் 35 பைசா, விண்ணப்பம் ஜெயின் கல்லூரி ரூபாய் 4/-, பச்சையப்பன் கல்லூரி ரூபாய் 3- இலயோலா கல்லூரி ரூபாய் 2/- ஆக மொத்தம் விண்ணப்பங்கள் மொத்தம் ரூபாய் 9/ டிக்கெட் மொத்தம் 75 பைசா.30 பைசா டிக்கெட்க்கு ரூபாய் 100/ சில்லறை மாற்ற முடியாது புது இடம் என்ன செய்வது நுங்கம்பாக்கம் முதல் மாம்பலம் வரை நடை தான்.

கல்லூரியில் வாங்கிய விண்ணப்பங்கள் உடனே பூர்த்திசெய்து அலுவலகத்தில் கொடுக்க, இலயோலா கல்லூரியில இடமில்லை என்று மறுநாளே கடிதம் வந்தது, பச்சையப்பன் கல்லூரியில் இன்றுவரை கடிதம் இல்லை. பிறகு ஜெயின் கல்லூரியில் PUC அங்கே படித்து முடித்து B.Sc., அந்த ஒரு கல்லூரி மட்டுமே. ஆக சில்லறை பிரச்சினை எப்போதும் உண்டு.

பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307

#CoinsProblem #Coins #Problem #College #seat #BSc #PUC #Bangaluru #Pachaiyappa #Loyola  #College

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: