Saturday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலைவி – தலைவலி ஆன கதை தெரியுமா உங்களுக்கு – ஓர் உண்மை நிகழ்வு

தலைவி – தலைவலி ஆன கதை தெரியுமா உங்களுக்கு – ஓர் உண்மை நிகழ்வு

தலைவி – தலைவலி ஆன கதை தெரியுமா உங்களுக்கு – ஓர் உண்மை நிகழ்வு

க‌டந்த சில மாதங்களுக்கு முன்பு, முக்கிய ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த

பிரமுகர் ஒருவர், (என் நண்பர் மூலமாக எனக்கு அறிமுகமானவர்) என்னைப் பார்க்க‍ வந்தார். அவரது மகளின் அழைப்பிதழை, தாம்பூலத் தட்டோடு எனக்கு வைத்து, என்னை அவரது ம‌களின் திருணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். நானும் அவசியம் வருகிறேன் என்று சொல்லி விட்டு, வந்தவருக்கு தேநீரும், உணவும் கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தேன்.

அவர் சென்ற பிறகு, அவர் கொடுத்த‍ திருமண அழைப்பிதழை முழுமையாக படித்தேன். அதில் அவர் குறிப்பிட்ட‍து என்ன‍ தெரியுமா?

அதில் இருந்த வரிகளை நான் அப்ப‍டியே சொன்னால், உங்களுக்கு எந்த கட்சி என்பதை நீங்கள் கண்டுபிடித்து விடுவீர்கள் ஆகையால், நான் சுருக்க‍மாக சொல்கிறேன்

“…. என்னை அரசியலில் வளர்த்தெடுத்த‍ எனது தாய் ……………  …………. தலைவலியின் ஆசிகளோடு நடைபெற விருக்கும் திருமணத்திற்கு ………”

மேலுள்ள‍ கடைசி வரியை மட்டும் மீண்டும் ஒருமுறை கவனமுடன் படியுங்கள்.

தலைவி – இந்த சொல்தான் இடம்பெற்றிருக்க‍ வேண்டும்.
ஆனால் அதிலோ
தலைவலி என்று இருந்தது.

இதனை படித்த‍ நான், சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தேன். என்னுடன் இருந்த எனது நண்பர்களிடமும் காண்பித்தேன் அவர்களும் இதைப்படித்துவிட்டு சிரிப்பாய் சிரித்தார்கள் சில நிமிடங்கள் கழித்து, தமிழகத்தின் நிலையை எண்ணி வருந்தினோம்.

இந்த பிழையை அவர் பார்த்தாரா அல்லது பார்த்து விட்டு, வேண்டுமென்றே விட்டு விட்டாரா, அல்ல‍து பார்க்க‍வே இல்லையா என்பதை யாமறியேன் பராபரமே

குறிப்பு –

அந்த திருமண அழைப்பிதழை எங்கோ பத்திரமாக வைத்து விட்டு தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் அதனையும் இங்கு வெளியிடுகிறேன்.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

#தலைவி #தலைவலி #கதை #உண்மைநிகழ்வு #FemaleLeader #HeadAche #TrueStory

Leave a Reply

%d bloggers like this: