Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து – தமிழக அரசே காரணம் – முற்றிலும் உண்மை

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து – தமிழக அரசே காரணம் – முற்றிலும் உண்மை

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து – தமிழக அரசே காரணம் – முற்றிலும் உண்மை

வரும் 28ஆம் தேதி திருவாரூர் இடைத்தேர்தல் நடைபெறும் என கடந்த

3ஆம்தேதி தேர்தல் அணையம் அறிவித்த‍து. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில்தான் இன்று காலையில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள‍து. இடைத்தேர்தல் ரத்துக்கான காரணத்தை தற் போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள‍து. கஜா நிவாரணப் பணிகளை தொடர் ந்து மேற்கொள்ள அனுமதிக்கும் வகையிலும், நிவாரணப் பணிகள் மேற் கொள்ளப் பட்டு வரும் நிலையில் தேர்தல் நடத்தப்படுவது சரியாக இருக்காது என்பதாலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள் ளது.

அதுமட்டுமின்றி ஏப்ரல் வரை தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டதாகவும் அரசின் கோரிக்கையை ஏற்று தேர்தலை ரத்து செய்ததாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஆக, தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசு ஒரு முக்கிய காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. தேர்தல் ரத்து செய்யப்படும் என தெரிந்தே அதிமுக, தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது தற்போது அனைவருக்கும் புரிய வருகிறது.

ஆனால் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்துக்கு காரணம் தமிழக அரசுதான் என்பதை  தமிழக அரசு மறுத்துள்ள‍து.

#அரசியல் #செய்திகள் #இடைத்தேர்தல் # கருணாநிதி #கலைஞர் #கலைவாணன் #சட்டமன்ற #திமுக., #திருவாரூர் #தொகுதி #பூண்டி #பூண்டிகலைவாணன்  #முகஸ்டாலின் #ஸ்டாலின் #வேட்பாளர் #ஸ்டாலின் #ByElection  #Candidate #DMK #Kalaignar #Karunanidhi #MKStalin #PoondiKalaivanan #Stalin #Thiruvarur #Cancel #vidhai2virutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: