100% full Charge, 12 நிமிடத்தில் உங்க Smartphone
100% full Charge, 12 நிமிடத்தில் உங்க Smartphone ஆக
இன்றைய வளர்ந்து வரும் நவநாகரீக மின்னணுதொழில் புரட்சியின் காரணமாக
எல்லோருடைய கைகளில் இன்று ஸ்மார்ட்போன்கள் தவழ்ந்து கொண்டிருப்பது சர்வசாதாரணமாகி விட்டது. இந்த ஸ்மார்ட்போன்களில் இன்டர்நெட்டுக்கான wifi data போன்றவற்றை ஆன் செய்து வைத்திருப்பதால் ஸ்மார்ட்போன்களில் விரை வாக சார்ஜ் தீர்ந்து விடுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் சார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் பொதுவாக லித்தியம் அயன் பேட்டரி தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரிகளை சார்ஜ் செய்ய குறைந்தது ஒரு மணி நேரத்துக்குமேல் ஆகும். இதனால் ஒரு மணி நேரத்திற்கு செல்போனில் நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கிறது. விரைவாக சார்ஜ் ஏறினால் நமக்கு இணையதள பயன்பாட்டுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணுவோம். செல்போனை வைத்து 10 நிமிடத்தில் முழு சார்ஜ் ஏறினால் இன்னும் அருமையாக இருக்கும் என்று நினைப்பவர்களும் உண்டு. இந்நிலையில் இவர்களு க்காகவே சாம்சங் நிறுவனம் பத்து, பனிரெண்டு நிமிடங்களில் சார்ஜ் ஆகும் வகையிலான கிராபைன் பேட்டரியை புதிய ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் எவ்வளவு அளவிற்கு லித்தியம் அயன் பேட்டரி சார்ஜ் ஆகிற தோ அந்த இலக்கை.
கிராபைன் பேட்டரிகள் வெறும் 12 நிமிடத்தில்எட்டிவிடுமாம். ஆனால் இந்த கிராபைன் பேட்டரிகளின் விலை கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். இந்த பேட்டரி அதிகளவில் தயாரிக்கப்படும்போது விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#கிராபைன் #பேட்டரி #ஸ்மார்ட்போன் #ஸ்மார்ட் #போன் #சார்ஜ்