Sunday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வங்கிகள் தேசியமயமாக்க‍ல் – முன்பும் பின்பும் – சுருக்க‍மாக பார்ப்போம்

வங்கிகள் தேசியமயமாக்கல் – முன்பும் பின்பும் – சுருக்க‍மாக பார்ப்போம்

வங்கிகள் தேசியமயமாக்க‍ல் – முன்பும் பின்பும் – சுருக்க‍மாக பார்ப்போம்

வங்கிகள் சேவைகள் தொடர்பாக: ஜூலை, 1969ல் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக

இருந்த போது முதலில் 14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது. அதற்கு முன்பு வங்கிகள் பெயருக்கு முன்னால் The வங்கி பெயர் கடைசியில் Ltd. என்று இருக்கும். இந்த இரண்டும் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் எடுக்கப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர் இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியா, மேலும் வங்கி கள் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன்பு வங்கி மேலாளர் ஏஜெண்ட் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகள் செட்டியார் பராம்பரியத்தில் வந்தவர்கள் கவனித்து வந்தார்கள். பாரத ஸ்டேட் வங்கி அரசு வங்கி என்பதால் அரசு கணக்குகள் பாரத ஸ்டேட் வங்கியில் இன்னும் இருக்கிறது.

வ‌ங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம். நாம் வங்கி கணக்கு துவக்க நினைத்தால் நம் பெயரை அந்த வங்கியில் கணக்கு வைத்தி ருக்கும் நபர் முன்மொழிய வேண்டும், அதுமட்டுமின்றி அவரின் கணக்கு லைவ்வி ல் இருக்க வேண்டும்.

1970-80 வரை கலைக்கல்லூரியில் படித்து B.A., B.Com மற்றும் B.Sc., படித்தவர்கள் முதல் கனவு வங்கி வேலை , அதற்கு பின்னர் அரசு வேலை என்பதாகும்

1977 ல் மத்தியில் ஜனதா ஆட்சி வந்தபின் வங்கிகளுக்காக Banking Service Recruitment Board என்ற ஒன்று கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு எனசெயல்பட ஆரம்பித் து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டார்கள். இதுவும் பிறகு கலைக்கப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் தேர்வு தனியாக நடத்தப்பட்டது.

1980ல் இன்னும் சில வங்கிகள் ஆக மொத்தம் தற்போது 20 வங்கிகள் தேசிய மயமா க்கப்பட்டது என நினைக்கிறேன். பாங்க் ஆஃப் மதுரை ஹவாலா பிரச்சினைக்கு பிறகு ஐ.சி‌ஐ‌சி வங்கி எடுத்துக்கொண்டது. பாரத ஸ்டேட் வங்கியின் இதர கிளைகள் என்று எல்லாம் ஒன்றாக சேர்ந்து தற்போது பாரத ஸ்டேட் வங்கி என்றே செயல் படுகிறது. 08/11/16 இரவு முதல் டிமான்ட்ஸ்டிரேஷன் 75 நாட்கள் இன்னொரு எமர்ஜென்சி நாட்கள்.

பாரத ஸ்டேட் வங்கியில் அந்த கிளைக்கு, வேறு கிளைமூலம் செலுத்தினால் பணம் பிடிக்கப்பட்டது. மேலும் பாஸ்புக் பதிவுகள் பாரத ஸ்டேட் வங்கியில் வேறு கிளை பதிவு செய்ய பணம் பிடிக்கப்பட்டு தற்போது இல்லை.

இதுதவிர பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இதர வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல் லை என்ற காரணத்துக்காக பணம் பிடிக்கப்பட்டது. இதில் பாரத ஸ்டேட் வங்கிக்கு நிறைய பணம் வந்துஇருக்கிறது. இது தவிர ICICI வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, HDFC மற் றும் இதர வங்கி கிளையில் நாம் நம் நண்பர்களுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் நமக்கு அந்த வங்கியில் கணக்கு இல்லை என்றால் பணம் அதிகம் செலுத் த வேண்டும். உதாரணமாக ரூபாய் 1,00/ ஐசிஐசியில் ரொக்கம் செலுத்தினால் ரூ.117/- அதிகம் செலுத்த வேண்டும்.இது என்ன நியாயம்.? பூனைக்கு யார் மணி கட்டுவது.முக்கிய விஷயம் நான் ஒய்வு பெற்ற அரசு ஊழியர் என்பது .

பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307

#StateBankOfIndia #Bank #HDFC #ICICI #Axis #BankOfMadurai #Hawala #ImperialBankOfIndia #BankingServiceRecruitmentBoard #இம்பீரியல்பேங்க்ஆஃப்இந்தியா #ஜனதா #ஆட்சி #செட்டியார் #இந்திரா காந்தி #Indiragandhi #பாரதஸ்டேட்வங்கி #பாங்க்ஆஃப்மதுரை #ஹவாலா #சேமிப்புகணக்கு #எச்.டி.எப்.சி. #ஐ‌சிஐசி #வங்கி #ஆக்ஸிஸ் #Nationalize  #எமர்ஜென்சி #Emergency #MinimumBalance #Balance #Minimum #vidhai2virucham 

Leave a Reply