Monday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோயிலுக்குள் ஒப்பாரி வைத்து அழுத‌ பெண்களால் பரபரப்பு – அதிர்ச்சியில் பக்தர்கள்

கோயிலுக்குள் ஒப்பாரி வைத்து அழுத‌ பெண்களால் பரபரப்பு – அதிர்ச்சியில் பக்தர்கள்

கோயிலுக்குள் ஒப்பாரி வைத்து அழுத‌ பெண்களால் பரபரப்பு – அதிர்ச்சியில் பக்தர்கள்

சென்னை திருவல்லிக்கேணியில் பிரசித்தி பெற்ற‍ கோயில்கள் நிறைய‌ உண்டு. அத்தகைய

பிரசித்த‍ பெற்ற‍ கோயில்களில் ஒன்றாக விளங்கும் ஒரு கோயிலுக்குள் நடந்த கூத்துதான் இது. இன்றுகாலை சுமார் 9 மணி இருக்கும் அப்போது நான் அக்கோயில் வழியாக போய்க்கொண்டிருந்தேன். அச்சமயத்தில் திடீரென்று யாரோ ஒரு பெண், ஒப்பாரி பாடலை கோயிலுக்குள் இருந்து ஒலி பெருக்கி (ஸ்பீக்க‍ர்) மூலமாக பாடு வது மிகவும் சத்த‍மாக‌ கேட்ட‍து. என்ன‍வென்று சற்று விசாரித்த‌ போதுதான் தெரிந் தது அவர்கள் பாடுவது ஒப்பாரி பாடல்கள் அல்ல‍ அது பக்தி பாடல்கள் என்று. அந்த பாடல்களை அங்கிருந்த பெண் ஒருவர் தனது சகாக்களோடு பக்தி பாடல்களை மிக வும் சொதப்பலாகவும், ஸ்ருதி இல்லாமலும், தாளமும் இல்லாமலும் கேட்பதற்கு அருவருப்பாக பாடிக் கொண்டிருந்தார்.

அந்த பெண்ணின் குரல் வளமோ, படும் மோசம், இருந்தது. (இன்னும் ஒருபடி மேலே போய் சொல்ல வேண்டுமானால், ஒப்பாரிகூட கொஞ்சம் ராகத்தோடும், தாளத் தோடும் கேட்பதற்கு மனத்தை பிழியும் அளவிற்கு இருக்கும் என்று சொல்ல‍லாம். )

என்ன கொடுமை சரவணன் இது என்ற வேதனையோடு அந்த கோயிலை கடந்து சென்றேன்.

எனது வேலையை முடித்துவிட்டு சுமார் 1 மணி இருக்கும் மீண்டும் அதே வழியாக திரும்பி வந்தேன். அப்போதும் அப்பெண் பாடிக்கொண்டிருந்தார். அப்பெண்ணின் குரல் படுநாராசமாக இருந்தது. அங்கிருந்தவர்கள் இதுகுறித்து விசாரித்தேன். ஒரு வர் என்னிடம், “அவரிடமே சொல்லியும், அப்பெண், விடாபிடியாக நான் பாடுவேன் என்று வீம்புபிடித்து பாடிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

அவர் பாடுவதை வெளியில் இருந்து கேட்பவர்களுக்கு ஏதோ கோயிலுக்குள் ஏதோ துர்மரணம் ஏற்பட்டுவிட்ட‍தோ என அதிர்ச்சியுடனே காணப்பட்ட‍னர். அக்கோயிலு க்குள் இருந்த பக்தர்களும், அருகில் இருப்போரும் தலையில் அடித்துக் கொண்டு, அங்கிருந்த மருந்தகம் ஒன்றில் பஞ்சு வாங்கி அதனை இரண்டு காதுகளிலும் அடைத்துக் கொண்டு தங்களது வேலையை செய்ய தொடங்கினார்கள்.

கோயிலில் பாட வேண்டும் என்று ஆர்வம் இந்த பெண்ணுக்கு இருப்ப‍து தவறேது மில்லை. ஆனால், தனது கட்டை குரலால் ஸ்ருதியில்லாமல், தாளமுமில்லாமல் ஏதோ இறந்தவர் வீட்டில் பிணத்தை சுற்றி அமர்ந்துகொண்டு ஒப்பாரி வைத்து பாடு வதால் அடுத்த‍வர் பாதிக்க‍ப்படுகிறார்களே என்பதை உணராமல் இருப்ப‍துதான் வேதனை. குரல் வளம், ஸ்ருதி, தாளம் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று சுமாராக இருந்தால்கூட ஓரளவு பொறுத்துக் கொள்ள‍லாம். 

அந்த பெண், பாடுவதை நான் தவறு என்று சொல்ல வில்லை. அவர், ஒலி வாங்கி மற்றும் ஒலி பெருக்கி (மைக் மற்றும் ஸ்பீக்க‍ர்)மூலமாக மற்ற‍வர்களுக்கு தொல்லை கொடுப்பதுதான் தவறு என்று இங்கு குறிப்பிடுகிறேன்.
இதே அப்பெண், அவரது வீட்டிலேயே பாடியிருக்க‍லாம், அல்ல‍து கோயிலுக்குள் பாட வேண்டும் என்ற ஆசையிருந்தால், ஒலி வாங்கி மற்றும் ஒலி பெருக்கி (மைக் மற்றும் ஸ்பீக்க‍ர்) இல்லாமல் பாடியிருந்தால், அந்த பாடல்கள் அந்த பெண் இருக்கு ம் இடத்தில் இருந்து சில அடி தூரம் வரை மட்டுமே கேட்டிருக்கும்.

விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 9884193081


#Chennai #Triplicane #Temple #Song #Devotion #Oppari #vidhai2virutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: