லஷ்மி நரசிம்ம பெருமாளின் பாரிவேட்டை – அற்புத தகவல்
லஷ்மி நரசிம்ம பெருமாளின் பாரிவேட்டை – அற்புத தகவல்
நான் சிறுவனாக இருந்த போது வாலாஜாபாத் என்ற கிராமத்தில்
இருந்தேன். 7 வயது முதல் 12 வயது வரை வருடாவருடம் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் அன்று என் ஊருக்கு அருகில் உள்ள பழைய சீவரம் கிராமத்தில் நடைபெறும் பாரிவேட்டையைக்காண சென்று விடுவோம்.
பொங்கல் அன்று இரவு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வாலாஜாபாத் வரும்போது சுமார் 1 மணி.அங்கே செங்கல்பட்டு போகும் சாலையில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்து எல்லோரும் தரிசனம் செய்தபிறகு கிளம்பி பழைய சீவரம் மலைக்கு செல் வார். அங்கே மலையில் சுவாமிக்கு திருமஞ்சனம் முடிந்தபின்னர் சுமார் 4 மணி அளவில் கீழே இறங்கி வருவார். அதே சமயம் பழைய சீவரம் லஷ்மி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளே இருந்து வெளியே வருவார். மாலை மஞ்சள் வெயில் பார்க்க மிக மிக அழகாக இருக்கும்.
அதன்பின்னர் வரதர் எதிரே உள்ள ஆற்றை கடந்து அங்கே உள்ள ஊரில் மண்டபபடி முடித்து மறுநாள் காலை தான் காஞ்சிபுரம் திரும்பி வருவார். பழைய சீவரம் பாரிவேட்டை சமயத்தில் ஊரே ஒரே கொண்டாட்டமாக இருக்கும் .தீடிர் கடைகள் , பலூன் விற்பனை இன்னும் பலபல..
காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் போது நானும் என் சகோதரனும் இரண்டு வருடங்கள் காஞ்சிபுரத்தில் இருந்து சைக்கிளில் சென்று வந்தது பசுமை யான நினைவுகள். ஆனால் இந்த விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் வெறும் எழுத்தில் வடித்தால் போதாது நேரில் சென்று வருடாவருடம் தரிசிக்க வேண்டும்.
பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710837307