எந்தெந்த நேரங்களில் குளிக்கக்கூடாது? – எந்தெந்த நேரங்களில் குளிக்கலாம்?
எந்தெந்த நேரங்களில் குளிக்கக்கூடாது? – எந்தெந்த நேரங்களில் குளிக்கலாம்?
நமது முன்னோர்கள், எந்தெந்த நேரங்களில் குளிக்கலாம் எந்தெந்த நேரங்களில்
குளிக்கக்கூடாது என்பதை நமக்கு சொல்லியும் அதனை அவர்களும் கடைபிடித்தி ருக்கிறார்கள்
அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்தநேரம் நான்கு மணி முதல் ஐந்து மணிவரை – இந்த நேரத்தில் குளிப்பது ரிஷி குளியல் என்றும் இது மிக மிக இது உத்தமமான பல நல்ல பலன்களை அவர்களுக்கு கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
விடியற்காலை ஐந்து மணிக்கு மேல் ஏழு மணிக்குள் குளிப்பது என்பது மனித குளியல் இது மத்திமமான பலன்களை அவர்களுக்கு கொடுக்கும் கருதப்படுகிறது.
காலை ஏழு மணிக்கு மேல் குளிப்பது என்பது ராட்சஸ குளியல் இது அதமான வழியில் அவர்களை கொண்டு சென்று தீரா துயரத்தில் துன்பத்திலும் ஆழ்த்தும் என்றும் கருதப்படுகிறது.
பொதுவாக சூரியன் உதயத்திற்கு குளிப்பது என்பது மனிதர்களுக்கு நல்லது அல்ல என்று சொல்கிறார்கள்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி