Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண் திருஷ்டியின் அறிகுறிகளும் பாதிப்புக்களும்

கண் திருஷ்டியின் அறிகுறிகளும் பாதிப்புக்களும்

கண் திருஷ்டியின் அறிகுறிகளும் பாதிப்புக்களும்

உங்களின் செயல்களையோ அல்ல‍து உங்கள் உறவுகளின் செயல்களையோ யாரா வது

வானளாவ பாராட்டி சென்றதும், உடனே உங்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்,

கண் திருஷ்டி வைத்துவிட்டா, உடனே சுத்திப் போடணும் என்று சொல்லி கண் திருஷ்டி க்கு ஆளானவர்களை அமர வைத்து, ஒரு கைப்பிடி உப்பையோ அல்ல‍து மண்ணை யோ எடுத்து, “பாவி கண்ணு, பரப்பா கண்ணு, முண்டக்கண்ணு” என்று “கண்ணுங்கவெடிக்க‍” என்ற வார்தையில் முடித்துவிட்டு, கையை கண் திருஷ்டிக்கு ஆளானவர் களின் வாய்க்கருகில் வைத்து மூன்று முறை துப்பச்சொல்லி, அதனை அப்ப‍டியே கொண்டு அடுப்பில் போடுவார்கள். அல்ல‍து ஒருசிறு தட்டில் குங்குமக் கரைசலை வைத்து, அதில் வெற்றிலையின்மேல் கற்பூரம் ஏற்றி, மூன்றுமுறை சுற்றுவர்.  அல்ல‍து வேறு மாதிரியாகவும் செய்வார்கள்   இதன்பிறகு கண்திருஷ்டி கழிந்து விட்டதாக சொல்வார்கள். பொதுவாக இந்த கண் திருஷ்டியின் அறிகுறி களையும், அதனால் உண்டாகும் பெரும் பாதிப்புக்களையும் இங்கு காண்போம்.

கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், பொருள் இழப்பு, வரவுக்கு மீறிய செலவு என்று ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இப்பிரச்சினைக்கு தீர்வு கண்ட அடுத்த‍ நொடியே அடுத்த பிரச்சினை கதவைத் தட்டும். பெண்களுக்கு உடல்சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனைசெய்து பயப்படுதல், கணவன் – மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, வெளியே சொல்ல முடியாத கஷ்டம், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கண்டறிய முடியாத கஷ்டம் இருக்கும்.

சுப நிகழ்வுகளில் தடை, மருத்துவச் செலவு, உணவை பார்த்தால் வெறுப்பு, சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்க மின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் போன்றவை உண்டாகும்.

திருஷ்டி தோஷ விளைவுகள், திருஷ்டி, தோஷ, விளைவுகள், கண்திருஷ்டி, கண்,

=> மாலை மலரில் வந்த கட்டுரை சிறிய மாற்றங்க‍ளுடன்…

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: