Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை.- நடிகை ரித்விகா

நான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை.- நடிகை ரித்விகா

நான் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை.- நடிகை ரித்விகா

தமிழ்திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவந்த நடிகை ரித்விகா. இருப்பினும்

இவர் திரை ரசிகர்களுக்கு இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்கள் மூலமாக தெரிய வந்தது. மேலும் விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் இவர் பட்டித்தொட்டியெங் கும் பிரபலம் ஆனார். இதன் காரணமாக சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட‍ சில விளம்பரங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரித்விகாவிற்கு ட்விட்டரில் ஆர்மிகள் பல உள்ளன.

தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் ரித்விகா தனக்கு விரைவி ல் திருமணம் நடைபெற இருக்கிறது என்று தகவலை படவிழா ஒன்றில் வெளிப் படையாக‌ தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த வருடம் அவருக்கும் எனக்கும், திருமணம் நடக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி இருக்கிறது. 

நான் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை. அடுத்த ஆண்டு தான் என் திருமணம் நடக்கும். அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களை, நடித்துமுடிக்க முழுமுயற்சியில் இறங்கியிருக்கிறேன். நான் ஏற்கன வே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன். புதிய படங்களுக்கு நான் ஒப்பு க்கொள்ள‍ வில்லை. மேலும் திருமணத்திற்கு பின் நடிப்பதா வேண்டாமா என்பதை என் கணவர்தான் முடிவு செய்வார்.” என்று கூறியிருக்கிறார். ரசிகர்களில் பலர் இத னை பாராட்டியும் ஒரு சிலர் தனது வருத்த‍த்தையும் தெரிவித்து வருகிறார்களாம்

#Riythvika #RiythvikaMatrimony #RiythvikaWedding #RiythvikaLover #Love #RiythvikaMarriage #இரண்டாம்உலகப்போரின்கடைசிகுண்டு #IrandamUlagaPorinKadaisiKundu #ரஞ்சித் #மெட்ராஸ் #கபாலி #நடிகைரித்விகா #நடிகை #ரித்விகா #ActressRiythvika

Leave a Reply