ரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் – ஆச்சரிய அரிய தகவல்
ரகசிய குறியீடுகள், இந்திய நாணயங்களில் – ஆச்சரிய அரிய தகவல்
இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்தான் நாசிக் (Nashik) இங்கு தான்
இந்திய ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படுவது நீங்கள் அறிந்த செய்தியே! ஆனால் நீங்கள் அறியாத செய்தி ஒன்று உள்ளது. ஆம், நாணயங்களில் ரகசிய குறியீடுகள் இருப்பதும் அவை எவற்றைக் குறிக்கின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்களா? பொதுவாக நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுக்குக் கீழே ஒரு புள்ளியோ, டைமண்ட் வடிவமோ, நட்சத்திர வடிவமோ அல்லது இதுபோன்ற எந்த குறியீடுகளு ம் இல்லாமல் இருப்பதை கவனியுங்கள். இவைதான் இந்திய அரசின் ரகசிய குறியீடுகள்.
நாணயங்கள், நாசிக் தவிர தில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுக்குக் கீழே ஒரே ஒரு புள்ளி குறியீடு இருந்தால் அது தில்லியிலும் தயாரிக்கப்பட்டது என்றும், டைமண்ட் குறியீடு இருந்தால் அது மும்பையில் தயாரிக்கப்பட்டது என்றும், நட்சத்திரக் குறியீடு இருந்தால் அது ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் இது போன்ற எந்தக் குறியீடுகளும் இல்லாமல் இரு ந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இதே நாணயங்களில் பொதிந்துள்ள பல ரகசிய குறியீடுகள் நிறைய உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக பின்வரும் காலக்கட்டங்களில் காண்போம்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி