தலைவிதியே – இறப்பிற்குபின், குணமடைய பிரார்த்தனையா? என்ன இது விநோதம்
தலைவிதியே – இறப்பிற்குபின், குணமடைய பிரார்த்தனையா? என்ன இது விநோதம்
வாட்ஸ் அப்பில் ஒரு துயரச் செய்தி, அந்த செய்தியை எப்படி சிரிப்பு செய்தியாக
மாற்றி விட்டார்கள் பாருங்கள். இதற்கு நாமக்கலில் நடந்த ஒரு துயரச் சம்பவமே இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை 18 அடி உயரமுள்ளது. நேற்று முன்தினம் விசேஷ தினத்தை ஒட்டி ஆஞ்சநேயர் விக்கிர கத்துக்கு 11அடியில் நடைமேடை அமைத்து பூஜைசெய்யப்பட்டது. இந்த கோயிலின் அர்ச்சகர், பக்தர்கள் கொடுக்கும் மாலையை ஆஞ்சநேயர் சிலைக்கு அணிவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்போது அவர் திடீரென அவர் நிலை தடுமாறி மேலிருந்து கீழே தலைகுப்புற விழுந்து விட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது.
இந்த துயரமான செய்தியைக்கூட அறிந்திடாமல் வாட்ஸ் அப்பில் எனது எண்ணு க்கு ஒருவர், தவறி விழுந்த அர்ச்சகர், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவர் நலம்பெற்று வர இறைவனை பிரார்த்தியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் இறந்த பிறகு பிரார்த்தித்து என்ன பயன்?
தயவுசெய்து ஒருசெய்தியை பகிரும்போது, அதன் தற்போதைய நிலை என்ன என்ப தை தொலைக்காட்சி செய்தியை பார்த்து தெரிந்துகொண்டு பகிரவேண்டுகிறேன். கண் மூடித்தனமாக எந்த ஒரு செய்தியையும் பகிரவேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081