விட்டது தொடர்கிறது! அந்த நெகிழ்ச்சியில் நான். . .
விட்டது தொடர்கிறது! அந்த நெகிழ்ச்சியில் நான். . .
ரங்கராஜன் ஆகிய நான், படித்து முடித்து வேலை தேடிய காலங்களில்
கதை, கவிதை மற்றும் கட்டுரைகள் என்ற பெயரில் கிறுக்கிய கிறுக்கல்கள் தீபம் கணையாழி இதழ்களில் வெளிவந்துள்ளன.பின்னர் வேலையில் கவனம், பணியில் இருந்து ஓய்வு. மகளுக்காக பெங்களூர் வாசம்.பொழுது போக வேண்டுமே என்ன செய்வது என்று யோசித்தேன் எழுதினால் என்ன என்று யோசித்தேன் . அதற்கு ஏற்ப பெங்களூரில் நான் வசிக்கும் பகுதியில் வெளிவரும் கார்டன் சிட்டி ஆங்கில பத்திரி கையில் ஒரு கட்டுரை எழுதினேன். உடனே வெளியானது.தொடர்ந்து கார்டன் சிட்டி ஆங்கில பத்திரிகையில் 9 கட்டுரைகள் மற்றும் 3 கடிதங்கள் இதுவரை வெளி வந்துள்ளது. நான் சென்னைவாசி என்பதால் ஏற்கனவே ஆகஸ்ட் 22 மெட்ராஸ் டே பற்றிய கட்டுரைகள் எழுதி நிறைய பரிசுகள் வாங்கி இருந்தேன். 2017 சீனியர் சிட்டிசன் அசோசியேஷன் நடத்திய மெட்ராஸ் டே பற்றிய கட்டுரை, பரிசு, பின்னர் தினமணி நாளிதழில் இணையதள மூலம் கட்டுரை அதன்மூலம் பரிசு, ராஜாஜி செண்டர் ஃபார் பப்ளிக் அபேர்ஸ் நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு, எஸ்ஸோ இந்தியா நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு, தொடர்ந்து தினமணி கவிதை மணியில் 5 கவிதைகள் தொடர்ந்து பெங்களூரில் இருந்து வெளிவரும் பிரதி இணைய தள மூலம் 3 சிறுகதை,16 கட்டுரைகள், தேன் சிட்டு இணையதள மூலம் 3 மாதங்கள் தொடர்ந்து கட்டுரை தற்போது விதை2விருட்சம் மூலம் கட்டுரைகள் தொடர்கிறது.
=> பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307