என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கோடு பொய்ச்செய்தியை வெளியிட்ட மக்கள் செய்தி மய்யத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கோடு பொய்ச்செய்தியை
வெளியிட்ட மக்கள் செய்தி மய்யத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
இன்று காலை எனது வாட்ஸ் அப்பில் எனது நண்பர் ஒருவர், ஒரு செய்தியினை பகிர்ந்துள்ளார். அதில் மக்கள் செய்தி மய்யம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அதில்
செய்தித்துறையா… மோசடி துறையா…
ஊடக அங்கீகார அட்டை
விலை ரூ15,000-
சத்தியா டீ.டி.பி. க்கு வாங்க
ரித்திக் பாயைப் பாருங்க
என்ற தலைப்பில் திருவல்லிக்கேணி எதிரில் சத்யா டிடிபி நிலையத்தில் ரித்திக் பாய் ஆல் இன் ஆல்,
என்ற ஒரு தவறான செய்தி வெளியாகி இருந்ததை பார்த்து நான் அதிர்ந்து போனேன். இதுகுறித்து அதில் உள்ள கைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கேட்டபோது,
‘இல்லை இல்லை. நான் உங்கள் கடையில் அச்சடித்து தருவதாக சொல்ல வில்லை. அடையாளத்திற்கான குறிப்பிட்டிருக்கிறேன் என்றார்.
நான், எனது கடையில் வாடகை ஒப்பந்தப் பத்திரம், விற்பனை ஒப்பந்தப் பத்திரம், ரெஸ்யூம் உள்ளிட்ட ஆவணங்களை டைப் செய்து கொடுக்கும் தொழிலை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறேன். மேற்கூறிய ஆவணங்களை டைப் செய்து பிரிண்ட் எடுத்துச் செல்ல என் கடைக்கு வாடிக்கையாளர்கள் எத்தனையோ பேர் வருவார்கள் போவார்கள். இதுநாள் வரை எனது கடையின் மீதோ அல்லது என்மீதோ எந்த ஒரு புகாரும் வந்ததில்லை. இதுவரை எந்த சட்டத்திற்கு புறம்பான காரியங்ளிலும் நான் ஈடுபட்டதில்லை.
ரித்திக் பாய் என்ற நபர், எனக்கு யாரென்றே தெரியாது அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த பொய்ச் செய்தியினை சரியாக விசாரிக்காமல் வெளியிட்டு எனக்கும் எனது கடைக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட மக்கள் செய்தி மய்யத்திற்கு நான் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
#makkalseithimaiyam