Thursday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெராக்ஸ் தொழிலா? அய்யோ வேண்டவே வேண்டாம் – நொந்து கெட்டவன் சொல்கிறேன் கேளுங்க‌

ஜெராக்ஸ் தொழிலா? அய்யோ வேண்டவே வேண்டாம் – நொந்து கெட்டவன் சொல்கிறேன் கேளுங்க‌

ஜெராக்ஸ் தொழிலா? அய்யோ வேண்டவே வேண்டாம் – நொந்து கெட்டவன் சொல்கிறேன் கேளுங்க‌

நான், சென்னையில் பல ஆண்டுகளாக சொந்தமாக‌ கடை வைத்து நடத்தி வருகிறேன். எனது கடையில் வாடகை ஒப்ப‍ந்தம், விற்பனை ஒப்ப‍ந்தம் உள்ளிட்ட‍ ஆவணங்களைத் தயாரித்து டைப் செய்து பிரிண்ட் எடுத்துக் கொடுத்த‍ல், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை செய்தல், Xerox Copy எடுத்துத் தருதல், உட்பட வியாபாரம் செய்து வருகிறேன். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு Xerox Copy போடுவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டேன். ஜெராக்ஸ் தொழிலால் ந‌மக்கு இலாபமில்லை. ஜெராக்ஸ் மிஷின் வைத்திருக்கும் நம்மால் தான் ஜெராக்ஸ் சர்வீஸ் இன்ஜினியருக்கு (Xerox Service Engineer) இலாபம். சில‌ ஜெராக்ஸ் சர்வீஸ் இன்ஜினிய‌ர்களால் எனக்கு ஏற்பட்ட‍ மோசமான அனுபவங்கள் ஏராளம்.

முன்பெல்லாம் சில ஆயிரங்களில் விலைக்கு கிடைத்த Xerox Machine (எந்திரம்), தற்போது லட்சங்களை எட்டிவிட்டது. கடன் வாங்கியோ, அல்ல‍து நகைகளை அடமானம் வைத்தோ, சில லட்சங்கள் கொடுத்து Xerox Machine வாங்கி போட்டாலும், லாபம் என்பது எட்டாக்கனிதான்.  ஒரு தீப்பெட்டி, 15 ஆண்டுகளுக்கு முன்பு 50 பைசா இருந்தது. தற்போது 1 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தீப்பெட்டி உதாரணத்திற்காக சொன்னேன். தேவையான பொருட்கள் முதல், தேவையில்லாத ஆடம்பர பொருட்கள் வரை விலை வானுயர பறந்து கொண்டிருக்கிறது ஆனால் ஆனால், Xerox Copy எடுக்க, ஒரு Copy 1 ரூபாய் நிலையில் இருந்து கீழிறங்கி, 75 பைசாவாகி, பின் 30 பைசாவாக சரிந்து கிடக்கிறது. ஏதோ இப்போதுதான் Xerox Copy  எடுத்துக் கொடுக்க‍ ஒரு Copyக்கு 1.50 என்ற ஏற்ற‌நிலை வந்துள்ள‍து வரவேற்கத் தக்கது என்றாலும், மந்தமாக ஏற்ற‍ம் காண்பது வேதனையே

Xerox கடை வேண்டவே வேண்டாம் என்று நான் சொல்லவிருக்கும் கீழ்க்காணும் காரணங்களே பிரதானம்

1. ஒரு ருபாய்க்கு, இரண்டு ரூபாய்க்கெல்லாம் Xerox Copy போட்டு கொடுத்தால், உங்களுக்கு லாபம் இல்லை. Xerox Copy ஒன்றுக்கு ரூ3/- வாங்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு ரூ.3/-ல் 25 முதல் 30 பைசா வரை லாபம் ஈட்ட‍ முடியும். ஆனால் அவ்வாறு வாடிக்கையாளரிடம் இருந்து உங்களால் வாங்க முடியாது. இவ்வாறு நீங்கள் வாங்க முயற்சித்தாலும், பல வாடிக்கையாளருடன் வீண் மனஸ்தாபமோ அல்ல‍து வாடிக்கையாளர்களை நீங்கள் இழக்க‍வோ நேரிடும். இதனால் ஒரு காப்பி, ரூ.1.50/- வாங்குகீறீர்கள். இதில் உங்களுக்கு எப்ப‍டி பார்த்தாலும் இழப்பு இழப்புதான்.

2. வாடிக்கையாளர்கள், உங்கள் கடைக்கு வந்து Xerox Copy எடுக்கச் சொல்வார்கள் அவ்வாறு நீங்கள் என்னதான் நன்றாக Xerox Copy போட்டு கொடுத்தாலும் அதனை அந்த வாடிக்கையாளருக்கு திருப்தி இல்லையென்றால் மீண்டும் மீண்டும் எடுக்க‍ச் சொல்லி அதுவும் நன்றாக எடுக்க‍ச் சொல்லி வற்புறுத்துவார்கள். வீணான Copy களுக்கு பணம் கொடுக்க‍ வாடிக்கையாளர்கள் மறுப்பார்கள். இதன் காரணமாக வீணான copyகள் உங்கள் கணக்கில் வந்து விடும் அதாவது நட்ட‍ம் ஏற்படும்.

(இந்த Xerox Copy போடுவதற்கு பணியாட்களை நீங்கள் நியமித்திருந்தால், அவர்கள் பங்குக்கு சில காப்பிகள் வீண் அடிப்பர். அல்ல‍து சில வேலையாட்களுக்கு ஆர்வக் கோளாறு இருக்கும். நீங்கள் இல்லாத நேரத்தில் Xerox Machine-னை திறந்து பார்த்து ஆராய்ச்சிகள் செய்யுபோது, அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் ஒரு பாகத்தின் மீது கையோ அல்ல‍து வேறு டூல்ஸோ இடிபட்டு, மிஷின் ரிப்பேர் ஆகும். ஆக‌ இதன்மூலமும் உங்களுக்கு நட்ட‍ம் ஏற்படும்)

3. நீங்கள் ஜெராக்ஸ் போட்டுக் கொண்டிருக்கும்போது Xerox Machine-ல் உள்ள‍ உதிரி பாகம், ஒன்று பழுதாகிவிட்ட‍து அதனை எடுத்துக் கொண்டு Xerox Machine சந்தையில் நீங்கள் விசாரித்து, உண்மையான சில்லறை விலை ரூ.1,000/- என்று வைத்துக் கொள்வோம். அந்த விலைக்கு நீங்கள் அந்த உதிரி பாகத்தை வாங்கி வருவீர்கள். ஆனால் ஜெராக்ஸ் சர்வீஸ் இன்ஜினியர் ( Xerox Service Engineer) வந்தால், அதே உதிரி பாகத்தின் விலை ரூ.2,000/- என்பார். இதோ இருக்கிறதே நானே சென்று வாங்கி வந்தேன் என்பார். இதைவிட விலை கூடுதல் இல்லையே என்று அவரிடம் நீங்கள் அவரிடம் வாதாடினாலும், அவர், இல்லை சார், இது ஹை குவாலிட்டி ஒரிஜினல் ஸ்பேர், இதன் விலை 2500/- ரூபாய், நான்தான் உங்களுக்கு ரூ.2000/- என்று குறைந்த விலைக்குத் தருகிறேன் என்று அடித்து சொல்வார். நீங்களும் வேறு வழியின்றி ரூ.1000/- பெருமானமுள்ள‍ உதிரி பாகத்தை ரூ.2000- கொடுத்து வாங்கி மிஷினுக்கு போடச் சொல்வீர்கள். இந்த வகையில் ஜெராக்ஸ் இன்ஜினியருக்கு லாபம் ரூ.1000/-, ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் உங்களுக்கு ரூ.1000 நட்ட‍ம்.

(என்ன‍தான் நீங்கள் சர்வீஸ் இன்ஜினியரை சம்ம‍திக்க வைத்து, நீங்கள் வாங்கி வந்த உதிரிபாகத்தை போடச் சொன்னாலும், இதைவிட உங்களுக்கு மிகப்பெரிய செலவு வைக்கும்படி Xerox Machineல் ஏதேனும் சில்மிஷம் செய்து விட்டு போய் விடுவது வேறு கதை)

4. Xerox Copy போடுவதற்கு முக்கியமாக Powder (தூள்) வேண்டும். Xerox Machine சந்தையில் அந்த Xerox பவுடரின் உண்மையான விலை ஒருகிலோ ரூ.1000/- என்றிருக்கும். ஆனால் சர்வீஸ் இன்ஜினியரோ அவர் கொண்டு வரும் Xerox பவுடர் விலை அரைகிலோ ரூ.1000/- (அப்போ ஒரு கிலை ரூ.2000/-) என்று சொல்வார். அதனை அவரே ஒரிஜினல் என்று வாதாடுவார். இந்த விஷயத்தில் ஜெராக்ஸ் சர்வீஸ் இன்ஜினியருக்கு ரூ.1000/- லாபம், உங்களுக்கு ரூ.1000/- நட்ட‍ம்.

5. Xerox Machineல் பேப்ப‍ர் அடிக்க‍டி சிக்க‍ நேரிடும் அவ்வாறு அடிக்கடி சிக்கும் போது, அந்த பேப்பர் வீண்தான். அந்த பேப்ப‍ருக்கு உண்டான தொகை, தூள், மின் கட்ட‍ணம், தேய்மானம் போன்றவறை உங்களுக்கு நட்ட‍ம்.

6அ. Xerox Machine வாங்கும்போதே, இன்ஜினியர் உங்களிடம் கேட்பார், சார், ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC – Annual Maintenance Contract) இவ்வ‍ளவு செலுத்தினால் போதும், மிஷின் ஏதாவது ரிப்பேர் ஆச்சுன்னா நீங்கள் அழைக்கும் போதெல்லாம் நான் வந்து, உங்க மிஷினை சரிசெய்து கொடுப்போம் என்று சொல்வார், நீங்களும், தலையை ஆட்டிவிட்டு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC – Annual Maintenance Contract) போட்டு ப‌ணம் செலுத்திய அடுத்த‍ நாளே உங்கள் Xerox Machine ரிப்பேர் ஆகுது. அப்போது அந்த இன்ஜினியரை நீங்கள் அழைக்கிறீர்கள், சார் இதோ வருகி றேன் அதோ வருகிறேன், இங்கிருக்கிறேன் அங்கு இருக்கிறேன் என்று சொல்லி 1 நாளோ அல்ல‍து 2 நாட்களோ கழித்துவருவார். இந்நிலையில் வாடிக்கையாளர்கள் இழப்பு ஏற்படும்,

6ஆ. ஆண்டு கட்ட‍ணம் எல்லாம் வேண்டாம், Xerox Machine ரிப்பேர் ஆகும்போது நான் உங்களை கூப்பிடுகிறேன் அப்போது நீங்கள் வந்து சரிசெய்துவிட்டு, அதற்குண்டான தொகையை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினால், அதற்கும் சரி என்று சொல்வார், (இதில் வேறு விஷம‌ம் உண்டு அது அவர்களது தொழில் ரகசியம்).

7. Xerox Machine என்பது தொடர்ச்சியாக ஓடும்போது உங்களுக்கு மின்கட்ட‍ணம் குறையும். ஆனால், ஒரு நாளைக்கு 300 Copy-க்கு குறைவாக‌ ஓடுவதாக வைத்துக் கொள்வோம். வாடிக்கையாளர்கள், வரும்போது, எழுந்து நீங்கள் Xerox Machineனை ஆன் செய்தவுடன் அது தயாராக அதிகபட்சமாக 30 விநாடிகள் தேவைப்படும், அதன் பிறகு Xerox Machine போட்டு முடித்து, அந்த மிஷினை Off செய்வீர்கள், ஆனால் அந்த மிஷின் முழுவதுமாக Off ஆவதற்கு குறைந்தபட்சம் 30 விநாடிகள் எடுத்துக் கொள்ளும். ஆக முதல் 30 விநாடிகள் மற்றும் முடிக்கும்போது ஒரு 30 விநாடிகள் ஆக மொத்த‍ம் 60 விநாடிகளுக்கு மின் கட்ட‍ணம் ஏறுமுகமாக இருக்கும். இந்த வகையில் உங்களுக்கு சில நூறு ரூபாய் நட்ட‍ம்.

(Xerox கடை போடுவதாக இருந்தால், ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 1000 Copyகளா வது Xerox Copy விற்பனை இருக்க வேண்டும். அப்போதுதான் Copy ஒன்றுக்கு 1 ரூபாய் வாங்கும் பட்சத்தில் ஏதோ ரூ.100க்கு 50 பைசா சொற்ப‌ லாபம் வரும்.)

8. நீங்கள் இப்போது வைத்திருக்கும் ஜெராக்ஸ் மிஷினை விற்றுவிட்டு வேறு Xerox Machine வாங்கினால், உங்களிடம் தற்போது இருக்கும் Xerox Machine விலையை அடிமாடு விலைக்கு எடுப்பார்கள். அதன்படி உங்களுக்கு சில ஆயிரங்கள் நட்ட‍ம், புதிதாக வாங்கிய மிஷினால் சில ஆயிரங்கள் நட்ட‍ம்.

Xerox தொழிலில் லாபம் ஈட்ட

1. நீங்கள் ஜெராக்ஸ் கடை ( Xerox Machine ) வைக்க‍ விரும்பினால், முதலில் நீங்கள் ஜெராக்ஸ் சர்வீஸ் இன்ஜினியராக ( Xerox Service Engineer ) இருக்க‍ வேண்டும். அல்ல‍து உங்கள் நலம்விரும்பிகள் யாராவது Xerox சர்வீஸ் இன்ஜினியராக இருக்க‍ வேண்டும்.

2. Xerox Copy ஒன்றுக்கு ரூ.3/- கட்ட‍ணமாக வசூலிக்க‍வேண்டும். அப்போதுதான், அந்த ரூ.3/-ல் 30 பைசா உங்களுக்கு லாபமாக வரும்.

3. நாளொன்றுக்கு Xerox Copy, 1000 காப்பிகளுக்குமேல் எடுக்கும் வண்ண‍ம் மக்க‍ள் தேவை மற்றும் மக்க‍ளின் நடமாட்ட‍த்தை அறிந்து போட வேண்டும். உதாரணமாக, நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பல்கலைக் கழக வளாகங்கள் போன்ற இடங்களில் ஒன்றினை தேர்வு செய்து ஜெராக் கடை போடலாம். 


என்னைவிட கணக்குல புலி நீங்க இருக்கீங்க, நீங்களே நான் சொன்ன கணக்கை கூட்டி கழிச்சு பாருங்க, நான் சொல்வதை நீங்கள் முழுமனத்தோடு ஆமோதிப்பீங்க•

(இதில் கடை வாடகை, பணியாள் சம்பளம், நீங்க‌ள் போட்ட முதல் மற்றும் கடன் வாங்கி மிஷின் வாங்கியிருந்தால், அசலோடு சேர்த்து வட்டி ஆகியவற்றையும் சேர்த்து கணக்கிட்டால் அய்யோ அம்மா நெஞ்சே வெடித்துவிடும் )

ஜெராக்ஸ் மிஷின் சர்வீஸ் இன்ஜினியர்களில் சில நல்ல‍ இன்ஜினியர்களும் இருக்காங்க, ஆனால் அதுபோன்ற ஆட்கள், நம் கண்களுக்கு தெரியாமல் போவது நமது துரதிஷ்டம்)

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – Cell: 98841 93081 (vidhai2virutcham@gmail.com)

#Xerox #XeroxMachine #vidhai2virutcham #AMC #AnnualMaintenanceContract #XeroxShop #ServiceEngineer #Engineer #Photocopier 

2 Comments

  • மணி. வீ

    நீங்கள் சொல்லும் கணக்கு நூற்றுக்கு நூறு சரிதான். ஒரு முக்கியமான விஷயம். ரூபாய் 2500 இன்க் வாங்கினால் 50 நாட்களுக்குள் தீர்ந்து விடுகிறது. ஒரு நாளைக்கு இன்க் ஒன்றிற்கே ரூபாய் 50 செலவாகிறது. ஜெராக்சில் வருமானமோ ஏறக்குறைய ரூபாய் 200 தான்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: