Tuesday, July 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூஜையின்போது தேங்காய் அழுகியிருந்தால் அது ஆனந்தத்தின் அறிகுறி, வெற்றியின் தூதுவன் – வியக்க‍வைக்கும் தகவல்

பூஜையின்போது தேங்காய் அழுகியிருந்தால் அது ஆனந்தத்தின் அறிகுறி, வெற்றியின் தூதுவன் – வியக்க‍வைக்கும் தகவல்

பூஜையின்போது தேங்காய் அழுகியிருந்தால் அது ஆனந்தத்தின் அறிகுறி, வெற்றியின் தூதுவன் – வியக்க‍ வைக்கும் தகவல்

வீட்டில் நல்ல காரியங்கள் செய்யும்போது பயன்படுத்தும் முக்கியப்

வீட்டில் நல்ல காரியங்கள் செய்யும்போது பயன்படுத்தும் முக்கியப் பொருள் தேங்காய். இறைவனுக்கு நம் உள்ளத்தின் சுத்தத்தைக் காண்பிக்க தேங்காயில் சில சகுனங்கள் உண்டு. தேங்காய் உடைக்கும்பொழுது அழுகி இருந்தால் தேவையில் லாத பயம், குழப்பம், கலக்கம் & ஏமாற்றம் அடைந்ததாக எண்ணிக் கொள்வார்கள். ஒருசிலா் நடக்கக் கூடாதது நடந்துவிட்டதைபோல தானும் பயந்து மற்றவா்களை யும் பயமுறுத்துவார்கள். ஆனால் பூஜையின் போது தேங்காய் அழுகியிருந்தால் அது ஆனந்தத்தின் அறிகுறியாம் .

அழுகிய அனைத்து தேங்காயும் காரிய சித்தி ஆவதன் அறிகுறி (வெற்றியின் தூதுவன்). ஒரு துணி எடுத்து நீரில் நனைத்து அழுக்கை துடைத்து பிழிந்தால் அழுக்கு நீர்தான் வரும் அதேபோலதான் உங்கள் பீடை, சரீர பீடை, துா்சொப்பனங்கள், கண்திருஷ்டி, ரோகம் ஆகியவை அனைத்தும் பிரார்த்தனை செய்து உடைக்கும் தேங்காயில் விலகியதன் அறிகுறியை காட்டுகிறது. முழு கொப்பரையாக இருந்தால் சுபகாரியம் உண்டாகும், புத்திர பாக்யம் உண்டாகும், பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும் என்று பெரியோர்கள் கூறுவர்.

அடுத்து, தேங்காயில் பூ இருந்தால் ரோக நாஸ்தி, எதிர்பாராத வரவு சொர்ண லாபம் ஏற்படுமாம். நீங்கள் உங்களையோ அல்லது இறைவனையோ முழுமையாக நம்பினால் போதும்

=> வாட்ஸ் அப்பில் வந்த தகவல்

 

#அழுகியதேங்காய் #அழுகிய #தேங்காய் #தேங்காய்பூ  #coconut #Symptoms #Symptom #Pooja #vidhai2virutcham #பீடை #சரீரபீடை #துா்சொப்பனங்கள் #கண்திருஷ்டி #ரோகம் #கண் #திருஷ்டி

Leave a Reply

%d bloggers like this: