Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கன்னிமரா கொடுத்த‍ நோஸ்கட்

கன்னிமரா கொடுத்த‍ நோஸ்கட்

எனக்கு கன்னிமரா கொடுத்த‍ நோஸ்கட்

என்ன இது ஒரு வித்தியாசமான தலைப்பு என்றால் படியங்கள் புரியும் என்ன

விஷயம் என. 1975ல் நான் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து வேலை தேடி சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.நூலகம் எங்கே என்று தேட ஆரம்பித்தேன். நான் என் உறவினர் வீட்டில் மேற்கு மாம்பலத்தில் வசித்த காலத்தில் அசோக் நகரில் நூலகம் இருந்தது. அங்கு சென்று புத்தகம் வாசிப்பது வழக்கம். பின்னர் தி.நகரில் உள்ள சிவஞானம் சாலையில் கிளை நூலகம் அங்கும் சென்று படிக்க ஆரம்பித்தேன். அந்த கிளை நூலகர் நண்பரானர். பிறகு அவர் தன் கல்வித் தகுதியை பள்ளி படிப்பில் இருந்து பட்டப்படிப்பு படிக்க ஆசைப்பட்டார். சென்னை பல்கலைக்கழகம் அப்போது தொலைதூரக் கல்வி ஆரம்பிக்க வில்லை. எனவே அவரை மைசூர் யூனிவர்சிட்டியில் சேரச் சொல்லி… தி.நகர் வெங்கட் நாராயண சாலையில் உள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் ஞாயிறு காலை சேர்த்து விட்டேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். பி.காம் படிப்பு தேர்ந்து எடுத்து படிக்க ஆரம்பித்தார்.

நான் சென்னையில் அநேகமாக சைக்கிள்மூலம் பயணம் செய்து வேலை தேட ஆரம்பித்தேன். அந்தமாதிரி செல்லும்போது கன்னிமாரா ஹோட்டலைப் பார்த்து ஆஹா ரொம்ப நாளாக கன்னிமாரா நூலகம் எங்கே இருக்கிறது என்று தேடினோ மே இதோ இங்கே இருக்கிறது என்று சைக்கிளை பார்க்கிங்கில் நிறுத்தி உள்ளே சென்று பார்த்தால், முழுவதும் ஏசி ஒன்றுமே புரிய வில்லை. சரி என்று ரிசப்ஷனில் கேட்டதும் சார் இது ஹோட்டல் நூலகம் இல்லை அது எழும்பூரில் உள்ளது என்று தெரிவித்தார். ஆஹா நல்ல நோஸ்கட் சரி என்று அங்கிருந்து வெளியே கிளம்பும் சமயம் கிரிக்கெட் வீரர்கள் அங்கே இருந்தார்கள். எனக்கும் கிரிக்கெட்டில் அவ்வள வாக ஈடுபாடு கிடையாது பார்ப்பேன் வெறி கிடையாது. ஆனால் அங்கே தமிழ் நாட்டு வீரர்களைப் பார்த்து பேசிவிட்டு வந்தேன். அதன் பிறகு கன்னிமாரா நூலகம் சென்று நூல்கள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

=> பாரதிராஜன் பெங்களூரில் இருந்து 9710838307

#கன்னிமாராஹோட்டல் #கன்னிமாரா #ஹோட்டல்  #கன்னிமரா #நூலகம் #கன்னிமராநூலகம் #ConnemaraLibrary #Connemara #Library #CannemaraHotel #Cannemara #Hotel #vidhai2virutcham 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: