Wednesday, November 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முடிந்தது நயன்தாரா காட்சி – படக்குழு கண்ணீர்

முடிந்தது நயன்தாரா காட்சி – படக்குழு கண்ணீர்

முடிந்தது நயன்தாரா காட்சி – படக்குழு கண்ணீர்

தமிழ்த்திரையுலகில் வித்தியாசமான கதையமைப்புடன் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்- நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இந்த திரைப்படத்தில். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். இசையமைப்பு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி செய்து வருகிறார்.

சென்னையின் பல்வேறு இடங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த புதன்கிழமையுடன் முடிந்தது நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள்.

அந்த கடைசி நாளில் படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வாட்ச் பரிசளித்து தானும் மகிழ்ந்து அவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா. பரிசை பெற்றுக் கொண்ட‌ படக்குழுவினர் எல்லோரது கண்களில் ஆனந்த‌ கண்ணீர் பெருக்கெடுத்த‍து

#MrLocal #Sivakarthikeyan #Nayanthara #Actress #RadhikaSarathkumar #Radhika #Sarathkumar #Comedy #YogiBabu #MRajesh #HipPopAadhi #Velaikaran #vidhai2virutcham #நயன்தாரா #யோகிபாபு #ராதிகா #சரத்குமார் #சதீஷ் #மிஸ்டர்லோக்கல் #சிவகார்த்திகேயன் #vidhai2virutcham

Leave a Reply