Sunday, March 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கவனம் தேவை (வாக்காள பெரு)மக்க‍ளே

கவனம் தேவை (வாக்காள பெரு)மக்க‍ளே

கவனம் தேவை (வாக்காள பெரு)மக்க‍ளே

(2019 பிப்ரவரி மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்)

தேர்தல் காய்ச்ச‍ல் தேசமெல்லாம் வேகவேகமாகப் பரவி வருகிறது. துணியைப்

போட்டு மூடி மாட்டுக்குப் பேரம் பேசுவதுபோல்… கட்சிகள் தங்கள் சுயமிழந்து கூட்ட‍ணிப் பேரத்தில் கூச்சமே இல்லாமல் இறங்கி வருகின்றன• வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன• சலுகைள்ள் இலவசங்கள் என்ற பெயரில் வாக்காளர்கள் இனி எக்கச்சக்க‍மாகக் கவனிக்க‍ப்பட போகிறார்கள்.

 

தேர்தல் வரும் கடைசி நான்கைந்து மாதங்களில்தான் ஆட்சியாளர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் மக்க‍ள் நினைவே வருகிறது. வறுமையை அழிக்க‍வும், விவசாயிகளின் விசனங்களை விசாரிக்க‍வும் வேலைவாய்ப்பை உருவாக்க‍வும், அப்போதுதான் பாவம் நேராகக் கிடைக்கிறது.

ஒரே தேசம், ஒரே வரி, கறுப்புப் பணம் ஒழிப்பு, எல்லோருக்கும் வங்கிக் கணக்கு, வங்கிக் கணக்கில் பணம் (ரூ.15 இலட்சம் அல்ல‍). ஆதாரின் அவசியம் அதன் பயன்பாடு, மான்கீ பாரத், பலூன், சுத்த‍மான இந்தியா, இந்தியாவில் செய்வோம், மான்யங்கள் குறைப்பு போன்று பல அறிவிப்புகளை செஃற தேர்தலின்போது பா ஜ க அறிவித்த‍து. இவைகள் எந்தளவு நிறைவேற்ற‍ப்பட்டுள்ள‍ன? அதன் பயன் என்ன‍? என்பதை இந்திய வாக்காளர்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ள‍ வேண்டியது அவசியம்.

ஆனால் அதற்குள் மேலும் சில அதிரடி அறிவிப்புகள் பொருளாதாரத்தில் பின் தங்கியவற்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு அறிவித்த‍துடன் குறைந்தபட்ச சம்பளம் தரப்படும் என்கிறது காங்கிரஸ் கட்சி. உடனே பா.ஜ•க•வும் சளைக்காமல் விவசாயிக்கு வருடம் ரூ.6000 தருவோம் இதோ பிடி இப்போதே முதல் தவனை என்கிறது.

அரசு ஊழியர்கள் கேட்காமலேயே ரூ.5 இலட்சம் வரை வரியில்லை என்ற அறிவிப்பு எல்லோருக்கும் வீடு, எல்லோருகும் கழிப்பிட வசதி, சிஎஸ்.டியில் வரிச் சலுகை, ராணுவத்துக்கு பல மடங்கு நிதி ஒதுக்கீடு.. உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மருத்துவ காப்பீடு, புதிய பெரிய மருத்துவமனைகள் என சகட்டு மேனிக்கு வீட்டுக்குப் போகும் பயத்திலோ அல்ல‍து மறுபடி வருவேன்னு சொல்லு என்ற தன்ன‍ம்பிக்கையிலோ மோடி அரசு மாயா ஜாலம் (வாய் ஜாலம்) நிகழ்த்தி வருகிறது.

சொந்தக்காசில் சூன்யம் வைத்துக் கொள்வதுபோல்… நம்முடைய சட்டைப் பையி லிருந்து ஏமாற்றி பிடுங்கப்பட்ட‍ பணமே திரும்ப வாக்குக்கு பணமாக வரப்போகிற து என்ற அடிப்படை அறிவைத் தொலைத்து விட்டு வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்க நம் வாக்காளர் பெருமக்க‍ள் வழக்க‍ம் போலவே தயாராகி விடக் கூடாது. ஆகவே கவனம் தேவை (வாக்காள பெரு)மக்க‍ளே கவனம் தேவை.

‘க‌வனிப்பு’களை உன்னிப்பாய் கவனித்து, சரியானவரை கவனத்தில் கொண்டு தேர்வு செய்தால்தான் நாடும் வீடும் நலம் பெறும்.

\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///\///\//\///\//\|

#urathaSindhanai #NamUrathaSindhanai #vidhai2virutcham

நம் உரத்த‍ சிந்தனை ( Nam Uratha Sindhanai ) மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///

Leave a Reply

%d bloggers like this: