Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தீவிரவாதம் – முட்டாள்தனத்தின் உச்சநிலை

தீவிரவாதம் – முட்டாள்தனத்தின் உச்சநிலை

Terrorism is The Peak of Nonsense

(எழுதியது விதை2விருட்சம் சத்தியமூர்த்தி)

இராணுவீரர்களின் மீதான‌ தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலை

வன்மையாக விதை2விருட்சம் கண்டிக்கிறது. வீரமரணம் அடைந்த நமது இராணுவ வீரர்களுக்கு விதை2விருட்சம் இணையத்தின் வீர வணக்க‍ங்களுடன் கூடிய கண்ணீர் அஞ்சலியை அவர்களின் பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறது.

நேற்று முன்தினம் மாலை ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 90க்கும் மேற்பட்ட பேருந்தில் துணை ராணுவப்படையினர் 2,500 பேர் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்தபோது 5-வதாக சென்று கொண்டி ருந்த பேருந்துமீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சிவசந்திரன் மற்றும் சுப்ரமணியம் ஆகிய‌ இரண்டு தமிழக வீரர்களும் அடக்க‍ம்.

மேற்கூறிய துயரச் சம்பவத்தை தொலைக்காட்சியில் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த தற்கொலை படை தாக்குதலுக்கு முன்பாக தற்கொலை படை தீவிரவாதியின் பேட்டி ஒன்று ஒளிபரப்பானது. அந்த பேட்டியில், நீங்கள் இந்த வீடியோவை பார்க்கும்போது, நான் சொர்க்க‍த்தில் இருப்பேன் என்று குறிப்பிட்டிருந்தான்.

மனித உயிர்களை துடிக்க‍ச் துடிக்கக் கொன்று குவித்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்தால்தான் தனக்கு சொர்க்க‍ம் கிடைக்கும் என்று சொல்வது எவ்வ‍ளவு முட்டாள்தனம். சொர்க்க‍ம் எங்கே இருக்கிறது. உயிர்களைக் கொன்று குவித்தால்தான் உனக்கு சொர்க்க‍ம் என்று எந்த மதமும் சொல்லவில்லையே

நாம் அடுத்த‍வரை வாழவைத்து வாழ்ந்தால், நாம் வாழும்போதே சொர்க்கத்தை காணலாம். காண்பது என்ன நாமே புதியதாய் சொர்க்க‍த்தை படைத்து, அதில் பல உயிர்களுக்கு நன்மை செய்தால், அவர்களின் கண்களுக்கு நாம் கண்கண்ட கடவுளாக தெரிவோமே!

இந்த இழிசெயலுக்கு ஏதோ பெயர் வைத்து போர் என்று அறிவித்து இப்ப‍டி துளியும் ஈவு இரக்க‍மின்றி, அப்பாவி மக்களையும், இராணுவ வீரர்களையும் கொன்று குவிப்பதை, எந்த‌ மதத்தவரும் ஏற்றுக் கொள்ள‍ மாட்டார்கள். அப்ப‍டி ஏற்று, கொல்ப வர்கள், உண்மையாக மதத்தை நேசித்த‍வர்களே அல்ல• அவர்களின் சொந்த மதத்திற்கு கெட்டபெயர் உண்டாக்க‍வே இதுபோன்ற இழிசெயல்களின் ஈடுபட்டு வருகிறார்கள். இது அவர்களின் முட்டாள்தனத்தின் உச்ச‍நிலை

மீண்டும் அறுதியிட்டுச் சொல்கிறேன். தீவிரவாதம் என்பது முட்டாள்தனத்தின் உச்ச‍நிலை.

இந்திய இராணுவத்தின் தோளோடுதோள்சேர்த்து நிற்க அனைத்து இந்தியர்களும் தயாராக இருந்து, அவர்களின் சதிவேலைகளை இழிசெயல்களை, வேரறத்து தீவிரவாதம் இல்லாத இந்தியாவை படைப்போம். 

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

#TerrorismIsThePeakOfNonsense தீவிரவாதிகளின் முட்டாள்தனத்தையும், அவர்களை கண்டிக்கும் வகையிலும் இந்த ஹேஷ்டேக் உலகளவில் twitter-ல் டிரெண்டிங் ஆக்க‌ பகிர வேண்டுகிறேன்.


#Kashmir, #Jammu #India #Military, #Army #IndianArmy #Pakisthan, #vidhai2virutcham #Terrorism #ThePeak #Nonsense #TerrorismIsThePeakOfNonsense

Leave a Reply

%d bloggers like this: