Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கலைஞர் பாணியில் கமலை கலாய்த்த‌ ஸ்டாலின்

கலைஞர் பாணியில் கமலை கலாய்த்த‌ ஸ்டாலின்

கலைஞர் பாணியில் கமலை கலாய்த்த‌ ஸ்டாலின்

தமிழக சட்ட‍மன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்ற‍

கழகத்தின் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின், நேற்று பாண்டிச்சேரியில் துணை நிலை ஆளுநர், கிரன்பேடி அவர்களுக்கு எதிராக‌ தர்ணா போராட்ட‍ம் நடத்திவரும் அம்மாநில முதல்வர், திரு. நாராயணசாமி அவர்களை நேரில் சந்தித்து, தனது தார்மீக ஆதரவைத் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த‍ பேட்டியில், பாண்டிச்சேரியின் வளர்ச்சியை, ஆளும் பாஜக தரப்பு அம்மாநில துணை நிலை ஆளுநர் , கிரண்பேடி அவர்கள் மூலமாக தடுப்ப‍தாக குற்ற‍ம் சாட்டினார்.

இறுதியாக‌ மக்க‍ள் நீதி மய்ய‍த்தின் தலைவரும், கலைஞானியுமான திரு. கமல் ஹாசனின் தி.மு.க குறித்து கடுமையான‌ விமர்சனம் குறித்து கேட்கப்பட்ட‍ கேள்வி க்கு, அவர், நான் அரசியல் பத்தி பேசிக்கிட்டு இருக்கேன் என்று ஒற்றை வரியில் பதிலளித்து, கலைஞர் பாணியில் கமலை கலாய்த்தார்.

இந்த பதிலை கேட்ட‍ அருகில் இருந்த பாண்டிச்சேரி முதல்வர் திரு. நாராயணசாமி, அமைச்சர்கள் உட்பட அனைவரும் வாய்விட்டு சிரித்து விட்ட‍னர்.

இதுபோன்ற கேள்விகளை கலைஞரிடம் செய்தியாளர்கள் கேட்கும்போது அவரும் இதுபோன்ற நகைச்சுவையாகவும், அதேநேரத்தில் அந்த கேள்விக்கு காரணமான நபரை பொருட்படுத்த வேண்டியதில்லை என்கிற ரீதியில் பதிலளிப்பார். தற்போது கலைஞரின் அதே பாணியை அவரது மகன், திரு. ஸ்டாலின் கையாண்டது ரசிக்கும் படியாக இருந்தது.

ஆனால் இந்த காட்சியை புதிய தலைமுறை தவிர வேறெந்த தொலைக்காட்சியும் ஒளிபரப்ப‍வில்லை.

#மக்க‍ள்நீதிமய்ய‍ம் #கமல்ஹாசன் #கமல் #திமுக #புதியதலைமுறை #திராவிடமுன்னேற்ற‍கழகம்  #முகஸ்டாலின் #ஸ்டாலின் #நாராயணசாமி #துணைநிலை #ஆளுநர் #கிரன்பேடி #கலைஞர், #MakkalNeedhiMaiyam #KamalHassan #Kamal #PuthiyaThalaimurai #DravidaMunnetraKazhagam #DMK #MKStalin #Stalin #Narayanasamy  #Pudhuvai #Pondichery #KirenBedu #vidhai2virutcham #Governor 

Leave a Reply