நினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ்
நினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ்
கதாநாயகியாக `ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் அறிமுகமான
மேகா ஆகாஷ். அந்த திரைப்படம் இன்னும் வெளிவர வில்லை. அடுத்து தனுஷுடன் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்தார். அந்த படமும் வெள்ளித் திரையை அலங்கரிக்க வில்லை. இதனால் மிகுந்த கவலையில் இருந்தார் மேகா ஆகாஷ்.
அதேநேரத்தில் மேகாஆகாஷுக்கு பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் படங்க ள் ரிலீசாகி ஆறுதல் கொடுத்தது. இதை பற்றி கூறும்போது ‘இந்த ஆண்டு தொடக் கத்திலேயே என்னோட படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கு. இது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா, அதையும் தாண்டி ஒரு வருத்தமும் இருக்கு. அது என்னோட ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் இன்னும் ரிலீசாகமல் இருக்கிறதுதான். இந்தப் படத்துல ரொம்ப அழகாக நடிச்சிருப்பேன். ஒவ்வொரு முறையும் இப்படம் ரிலீஸ் ஆகிவிடும்னு நினைச்சு ஏமாந்து போகிறேன்’’ என்று கூறி உள்ளார்.