புல எண் (Survey Number) என்றால் என்ன?
புல எண் (Survey Number) என்றால் என்ன?
பொதுவாக சொத்து ஆவணங்களில் புல எண். அதாவது சர்வே நெம்பர் (Survey Number) என்று
குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த புல எண்கள் என்றால் என்ன என்பதை சுருக்கமாக இங்கு காண்போம்.
ஒவ்வொரு மாவட்டமும் (District) பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் (Village) பிரிக்கப்பட்டிருக்கும். அந்தந்த கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனி எண்கள் வழங்கப்பட்டிருக்கும். இந்த எண்களுக்கு பெயரே புல எண் (Survey Number) ஆகும். இந்த புல எண்களுக்கு உட்பிரிவுகளும் உண்டு.
= விதை2விருட்சம் சத்தியமூர்த்தி- 9884193081