அவருடன் நான்… – நடிகை ரெஜினா
அவருடன் நான்… – நடிகை ரெஜினா
சென்னையில் தொடங்கிய கள்ளப்பார்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்
கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இது ஏப்ரலில் வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது. இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி, நடிகை ரெஜினா நடித்து வருகின்றனர். மேலும் புதுமுக நடிகர் ஹரிஷ் பொராடி வில்லனாக அறிமுகமாகிறார்.
இதில் அரவிந்த்சாமி, ஹார்ட்வேர் என்ஜினீயராகவும், ரெஜினா நடன ஆசிரியையாகவும் நடித்து வருகிறார்கள். தனது வேடம் பற்றி ரெஜினா கூறும்போது ‘இது எனக்கு மிகவும் பிடித்த வேடம். எனது வேடத்துக்கு படத்தின் கதையில் நிறைய முக்கியத் துவம் உள்ளது. அரவிந்தசாமியுடன் நான் நடித்ததில் ரெட்டை மகிழ்ச்சி’ என்று கூறி இருக்கிறார்.