Thursday, December 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கிரையப் பத்திரப் பதிவின்போது Registered Office-ல் பதியப்படும் விவரங்கள்

கிரையப்பத்திரப் பதிவின்போது Registered Office-ல் / Sub-Registered Office-ல் பதியப்படும் விவரங்கள்

கிரையப்பத்திரப் பதிவின்போது பதிவாளர் அலுவலத்தில் / சார்பதிவாளர் அலுவலத்தில் பதியப்படும் விவரங்கள்

ஒரு சொத்து வாங்கும்போதோ அல்ல‍து விற்கும்போதோ, முறையான

கிரையப் பத்திரம் அதாவது விற்பனை பத்திரம் தயாரித்து எடுத்துக் கொண்டு உரிய பதிவாளர் அலுவலகத்திலோ அல்ல‍து சார்பதிவாளர் அலுவலகத்திலோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். அங்கு கிரையப் பத்திரத்தின் முதல் தாளின் பின் பக்க‍த்தில் பதிவாளர் அல்ல‍து சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.

1. ஆவண‌ எண் மற்றும் வருடம்

2. சொத்து விற்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, தந்தை பெயர் மற்றும் முகவரி

3. சொத்து வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, தந்தை பெயர் மற்றும் முகவரி

4. புகைப்படங்களில் பதிவாளர் அல்ல‍து சார் பதிவாளரின் கையொப்பம்

5. சொத்து பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம், சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை

6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம், பெயர், தந்தை பெயர் (சாட்சி திருமணமான‌ பெண்ணாக இருந்தால் கணவரின் பெயர்) மற்றும் முழுமையான‌ முகவரி (விற்பனை பத்திரத்தின் கடைசி பக்க‍த்தில் இரு சாட்சிகளும் கையெழுத்திட வேண்டும்)

7. மொத்த பக்கங்களின் எண்ணிக்கை

8. மொத்த தாள்களின் எண்ணிக்கை

9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

10. எல்லா தாள்களின் கீழே பதிவு எண். மற்றும் வருடம்


=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 9884193081

#Property #PropertyRegistration #Registration  #Registrar #SubRegistrar #SaleDeed #Witnesses #Documents  #கையொப்பம் #பதிவாளர் சார்பதிவாளர் #Signature #கிரையப் பத்திரம்

Leave a Reply