குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு – முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை – ஓர் அலசல்
குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு – முதல்நாள் முதல் தீர்ப்பு நாள் வரை – ஓர் அலசல்
கணவன் மனைவி இருவருமே மனமொத்து பிரிய சம்மதித்து, (Mutual Divorce) தொடரும் வழக்குகளில், குடும்ப நீதிமன்றத்தை பொறுத்தமட்டில் வழக்கறிஞர்களின் பணி, விவாகரத்து கோருபவரிடம் மற்றும் அதற்கு பதில் தருபவர்களிடம் இருந்து சரியான ஆவணங்களை பெற்று, அதனை சரிபார்த்து, அவற்றை உரிய முறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண் டும். இதுதான் அவர்களின் பணி. அதன்பிறகு இதில் வழக்கறிஞர் களுக்கு வேலை யில்லை. நீதிபதி-ம் கணவனும் மனைவியும்தான் பேசவேண்டும். (ஒரு வேளை வரதட்சனை கொடுமை வன்கொடுமை, கள்ளக்காதல் தொடர்பு மற்றும் இதர குற்ற வழக்குகள் போன்றவை இந்த வழக்கில் பிரதான காரணங்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே வழக்கறிஞர்களுக்கு வேலையுண்டு). வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் உங்களுடன் உங்கள் வழக்கறிஞரும் கட்டாயம் ஆஜாராக வேண்டும். உங்களால் விசாரணைக்கு வர முடியாவிட்டால், விசாரணையின்போது உங்கள் வழக்கறிஞர் ஆஜராகி அதற்கான காரணத்தை நீதிபதியிடம் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
எடுத்த எடுப்பிலேயே நீதிமன்றம் தம்பதிகளுக்கு விவாகரத்து கொடுத்து விடாது. கணவனும் மனைவியும் மனமொத்து பிரிவதாகஇருந்தால் விவாகரத்து விரைவாக கிடைத்து விடும். அதேநேரத்தில் விவாகரத்தில் இருவரில் ஒருவருக்கு விருப்பம் இல்லை யென்றால் கொஞ்சம் தாமதமாகும். அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி, கணவன்மனைவி இருவரையும் கவுன்லிங்கிற்கு அனுப்புவார். அக்கவுன்சிலிங்கில் கணவன் மனைவி இருவரையும் தனித்தனியாகவும், ஒன்றாகவும் அழைத்துப் பேசி கணவன் மனைவி இருவரையும் இணைந்து வாழவைக்க முயற்சிகள் எடுப்பர். ஒன்றிரண்டு கவுன்ஸிங்கிலேயே சிற்சில தம்பதிகள் இணைந்து வாழ முழுமனத்து டன் சம்மதித்து, நீதிமன்றத்திற்கு வரும்போது தனித்தனியாக வந்தவர்கள் போகும் போது இருவரும் கைகோர்த்து சிரித்து பேசி செல்வதுண்டு. பல தம்பதிகளுக்கு மாதக் கணக்கில் கவுன்சிலிங் கொடுத்து அவர்களை சேர்ந்து வாழ வைப்பார்கள்.
சில தம்பதிகளில் ஒருவருக்கு, வீண் பிடிவாதம், வரட்டு கௌரவம், தேவையற்ற ஆணவம் கொண்டு சேர்ந்து வாழவே மாட்டேன் என்று சொல்லும் பட்சத்தில் வேறு வழியின்றி இன்னொரு துணையை அழைத்து இதுபோன்றவருடன் சேர்ந்து வாழ்வதை விட விவாகரத்து வாங்கிவிட்டு, வேறு ஒரு துணையை மணந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டுவர். அதனையே ஆவணமாக தயாரித்து அதனை உரிய நீதிபதி அவர்களின் கவனத்திற்கு அனுப்புவார். இந்த வழக்கு ஆண்டு க்கணக்கில் நடக்கும் அதன்பிறகு இதனை நீதிபதி பரிசீலித்து, மீண்டும் ஒரு முறை கணவன் மனைவி இருவரிடமும் விவாகரத்து பெறுவதற்கு சம்மதமா? என்று கேட்பார். அவர்கள் இருவரும் முழுமுனத்துடன் சம்மதம் என்று தெரிவித்தபிறகு, பெண்ணின் திருமணத்திற்கு பெண்வீட்டார் செய்த செலவினம், நகைகள் மற்றும் சீர்வரிசைகள் ஒன்று விடாமல் பெற்றுக் கொண்டீர்களா என்று பெண்ணிடம் கேட்பார். அதற்கு அப்பெண், ஆம் என்று பதிலளித்தால், அடுத்த சில மாதங்கள் கழித்து தீர்ப்பு தேதி குறிப்பிடுவார். அந்த நாளில் விவாகரத்து என்று தீர்ப்பு வந்து விடும். பெண்ணின் திருமணத்திற்கு பெண் வீட்டார் செய்த செலவினங்கள், நகைகள் மற்றும் சீர்வரிசைகளை அந்த பெண்ணிடம் திருப்பித் தர அந்த கணவன் மறுத்திருந்தால், நீதிமன்றமே தலையிட்டு, அவற்றை அப்பெண்ணிடம் ஒப்படைக்க அந்த பெண்ணின் கணவருக்கு ஆணையிடும்.) இதனால் இன்னும் சிலகாலம் தீர்ப்பு தள்ளிப்போக வாய்ப்புண்டு.
ஆண்டுக்கணக்கில் வழக்கு நடக்கும். தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். அதற்கு பதில், கணவன் மனைவி இருவரில் ஒருவராவது, ஈகோ பார்க்காமல் கொஞ்சம் விட்டுக்கொடுத்து அவர்களே அவர்களின் துணையை தனியாக சந்தித்து, மனம்விட்டுபேசி, தன்மீது தன் துணைக்கு அப்படி என்ன கோபம் எனக் கேட்டு தெரிந்துகொண்டு. அந்த துணையின் மனத்தில் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும். அப்போது அந்த துணை சொல்லும் காரணம், நியாயமாக இருந்தால் அதாவது உண்மையிலேயே தன்மீதுதான் தவறு இருப்பதாக அத்துணை உணர்ந்தால், அந்த துணை தனது தவற்றை திருத்திக் கொள்வதாகச் சொல்லி தனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்கலாம். தவறு தன் பக்கம் இல்லை யென்றால் நீதிமன்றமே முடிவு காணட்டும்.
(குழந்தைகள் இருந்தால் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு வருவதற்கு இன்னும் கால தாமதமாகும். )
குறிப்பு:
வரதட்சனை கொடுமை, வன்கொடுமை, கள்ளக்காதல், தொற்றுநோய், உடலுறவில் தகுதியின்மை, குற்ற வழக்குகளில் தொடர்பு உட்பட சில காரணங்கள் பிரதானமாக இருந்து அவை நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம், பாதிக்கப்பட்டவரின் கோரிக்கையை ஏற்று அவருக்கு உடனடியாக விவாகரத்து வழங்குவதோடு, ஏமாற்றி குற்றம் இழைத்தவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கவும், கடுமையான தண்டனைகள் வழங்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – (vidhai2virutcham@gmail.com) 9884193081