Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின்

கூட்டணி உறுதியாகியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்று முடிவாகி உள்ளது. ராகுல்காந்தியுடன், கனிமொழி நடத்திய பேச்சு வார்த்தையில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை, இன்று சென்னை அறிவாலயத்தில் இரவு 8 மணியளவில் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

இதன்படி காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவாகியுள் ளது. அதாவது தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தரப்பில் முகுல் வாஸ்னிக், வேணுகோபால், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரும் திமுக தரப்பில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளி ட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையின் முடிவில் தற்போது கூட்டணி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.


#DmkCongressAlliance #Dmk #Congress #Alliance #MKStalin #Stalin #vidhai2virutcham #KSAlagiri #KSAzhagiri #AnnaArivaayalam #LokhSabha #Election

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: