மீண்டும் பெண்ணடிமை மலரும் – இன்றைய சில பெண்களால்
மீண்டும் பெண்ணடிமை மலரும் – இன்றைய சில பெண்களால்
இன்றைய பெண்கள், சுதந்திரமாக அவர்களுக்கு பிடித்த உடைகளை
உடுத்துகின்றனர். அவர்ளுக்கு பிடித்த உணவுவகைகளை உண்கின்றனர். அவர்களு க்கு பிடித்த படிப்புக்களை கற்று, பட்டம் பெறுகின்றனர். அவர்களுக்கு பிடித்த வேலையை செய்கின்றனர். மொத்தமாக சொன்னால், இன்றைய பெண்கள், சுதந்திர காற்றை முழுவதுமாக சுவாசித்து, வாழ்க்கையை முழுமையாக தங்கள் விருப்பம் போல் அனுபவித்து மகிழ்கின்றனர். ஆனால் இந்த பெண் சுதந்திரத்திற்கு பின்னணியில் எத்தனை எத்தனை சோகங்கள், எத்தனை எத்தனை போராட்டங்கள் அப்பப்பா! நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கே. அந்த துயர்பட்ட சரித்திரத்தினை சுருக்கமாக பார்க்கலாம்.
நமது முன்னோர் காலத்தில் எல்லாம், பெண்கள் வீட்டிலேயே சிறைப்பட்டுக் கிடந்தனர். சுயநலம் மிக்க சில ஆண்களால் பெண்களுக்கு கல்வியறிவு, பொது அறிவு, விழிப்புணர்வு, அரசியல், நாட்டு நடப்பு போன்ற எவற்றையுமே அறிந்திட, கற்றுத் தேர்ந்திட தடை போடப்பட்டது. அக்காலப் பெண்கள், தங்களது உலகமே தங்களது வீடுதான்! என்றும் கணவனின் குறிப்பறிந்து, அவனுக்கு பணிவிடை செய்தும், வீட்டுவேலைகளில் மட்டுமே பெண்கள் ஈடுபட்டும் ஆண்களுக்கு சேவகம் செய்யும், ஏதோ கொத்தடிமைகள்போல தங்களது வாழ்க்கையை நகர்த்திச் சென்றனர். பால்மணம் மாறா சிறுமிக்கு, சிறுவனை மணம் முடித்து வைத்தும், அவளுக்கு பிடிக்கிறதோ இல்லையோ அச்சிறுவன்தான் அவனுக்கு வாழ்க்கைத் துணை என்றாக்கி, அவள் பருவம் அடையும்போது, அவளுக்கு பிடிக்க வில்லை யென்றாலும் சகித்துக்கொண்டு, அக்குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு மட்டுமல் லாது, பெண் உறவுகளான மாமியார், நாத்தனார், அக்கா, போன்ற பெண்களுக்கும் ஒரு வேலைக்காரியாக வாழ வேண்டியிருந்தது. இதில் வேறு மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை வேறு! பெண்ணை பெண்களே கொடுமை செய்த கண்ணீர் கதைகள் ஏராளம் ஏராளம். துரதிஷ்டவசமாக அச்சிறுமி மணந்த சிறுவன், இறந்து விட்டால், ஏதும் அறியா அச்சிறுமிக்கு மொட்டையடித்தும், கைம்பெண் என்ற முத்திரையுடன் (இந்த மூட சடங்குகளை நான் விவரிக்க விரும்ப வில்லை.) எப்படி எப்படி அச்சிறுமியின் மனதை புண்படுத்த முடியுமோ! அவ்வளவும் புண்படுத்தினர். அச்சிறுமி வளர்ந்த பருவப் பெண்ணாகும் போதும், கைம்பெண் என்ற பட்டத்தால், தனக்கேற்ற ஒரு துணையை மணக்க ஆண் வர்க்கம் விதித்த தடையினால், தனது ஆயுள் முழுக்க கன்னியாகவே வாழ்ந்து, ஆண்களுக்கு சேவகம் செய்யும் அடிமை போல இருந்து செத்து மடிவாள்.
இருளை கிழிக்கும் ஒளிகளாக
காலத்தை வென்றவர்களான பெரியார், பாரதியார், பாரதிதாசன் உட்பட பல பெருமைமிகு தலைவர்கள், பெண்களை இச்சமூகம் கொத்தடிமை போல நடத்துவதும், ஆண்களின் உடல்பசியைத் தீர்க்கும் உணவாக பார்க்கப்படுவதையும் கண்டு, மனவேதனை அடைந்து, பெண்களும் சமூகத்தின் கண்கள்தான் என்பதை, பெண்களை அடிமைப்படுத்தும் ஆண்களுக்கு எடுத்துரைத்தும், அதனை பெண்களு க்கும் புரிய வைத்து, பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க பெரும் பாடுபட்டனர். அவர் களின் கடின முயற்சியின் விளைவாக இன்று பெண்கள் கல்வியில், அரசியலில், பொது அறிவில், வேலையில், வியாபாரத்தில், விஞ்ஞானத்தில், விண்வெளியில் போன்ற எண்ணற்ற துறைகளில் பெண்கள் சாதனை பல படைத்து வருவதை பார்க்கும் எங்கள் நாட்டு பெண்கள் இவர்கள் என்று மார்த்தட்டி பெருமைப்பட வேண்டி விஷயமே!
ஆனால் . . .
பெண்கள், தங்களுக்கு பிடித்த நல்லதொரு ஆண் மகனை மணந்து, நட்பு ரீதியாக இருவரும் இல்லறம் நடத்தி, நல்லறமாக கொண்டுசென்று, வருங்கால சங்கதிக ளை ஆரோக்கியமான சமூகத்தில் வாழ (வைக்க) வேண்டிய பெண்கள், பெண்ணடி மைத் தனத்திலிருந்து, பல தடைகளை உடைத்து, மெல்லமெல்ல மீண்டபெண்களி ல் சிலர், பெண் சுதந்திரத்தை தவறாகப் புரிந்துகொண்டு, மேல்நாட்டு நாகரீக மோகத்தினாலும், பண போதையாலும் குலப்பெருமை மறந்து, தனது குடும்பத்தின் பெருமையை மறந்து மது, புகை, பாக்கு, போன்ற வற்றிற்கு அடிமையானதோடு அல்லாமல், குடும்பத்தையும் புறக்கணித்து, தோழனாக நினைக்க வேண்டிய கணவனையும் மதிக்காமல் குழந்தைகளின் நலனையும் சிறிதும் எண்ணிப் பாராமல், வேண்டாத சேர்க்கை யினால் தவறான பாதையில் சென்று, பெண் குலத்திற்கே தீராத பழியை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் பல யுகங்களாக அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை மீண்டும் இழந்து, பெண்ணடிமை மீண்டும் மலர்ந்து விடுமோ என்ற கவலை கலந்த அச்சம் எனக்குள் விஸ்வரூப மாக எழுகிறது. இது நாளைக்கே நிகழ்ந்து விடாது ஆனால் அடுத்த 20 ஆண்டுகள் கழித்துக்கூட மீண்டும் பெண்ணடிமை மலரும் அது ஆண்களால் அல்ல இன்றைய சில பெண்களால்தான்.
=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 98841 93081
#Femaleslave #Female #Slave