Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாப்பிட்டதும் மலம் கழிக்க ஓடுகிறீர்களா? – இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால்

சாப்பிட்டதும் மலம் கழிக்க ஓடுகிறீர்களா?- இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால்

சாப்பிட்டதும் மலம் கழிக்க ஓடுகிறீர்களா?- இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால்

சாப்பிட்டு முடித்த‍தும் மலம் கழிக்க‍ கழிப்பறை நோக்கி ஓடும் சிலரை

நாம் நேரடியாக பார்த்திருப்போம்… அவர்கள் ஏன் இதுபோன்ற பாதிப்பு இருக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு?

உணவகங்கள், துரித உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சாலையோர கடை களில் விற்கப்படும் உணவுகளை விரும்பி அதிகம் உண்பவர்கள்தான் இது போன்று சாப்பிட்டு முடித்ததும் மலம் கழிக்க‍ கழிப்பறை நோக்கி ஓடுகிறார்கள்.

மேற்சொன்ன‍ இடங்களில், சுத்த‍மான தண்ணீரில் கழுவாத சமையல் பாத்திரங்களி ல் செய்ய‍ப்படும் உணவுகளையும் அந்த உணவுகளை சரியா கழுவாத தட்டு மற்றும் டம்ளர்களில் பறிமாறப்பட்டும் சாப்பிட்டாலும் அல்ல‍து பதார்த்த‍ங்களிலும் சாலட்டி லும் சுத்தமான தண்ணீரில் அலசாமல் போடப்படும் பச்சைக்காய்கறிகள், பழங்க ளை சாப்பிடுவதாலும் அல்ல‍து செயற்கை இரசாயனங்கள், செயற்கை பொடிகள் கலக்க‍ப்படும் உணவு வகைகளை சாப்பிடுவதாலும் அமீபியாசிஸ் எனும் தொற்றுக் கிருமி தாக்குதல் உடன‌டியாக ஏற்ப‍ட்டு பாதிப்பை உண்டாக்குகிறது. இதனால்தான் அவர்கள் சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். இதனை அப்ப‍டியே கவனிக்காமல் விட்டுவிட்டால், நாளுக்குநாள் உடல் எடை இழப்பு ஏற்பட்டு உடலுக்குள் இருக்கும் தேவையான‌ எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும். இதன் விளைவாக, சாதாரண நோய்கள் முதல் அபாயகர நோய்கள் வரை உங்களை தாக்கக்கூடும். எனவே சமைக்க‍ உபயோகப்படுத்தப்படும் பாத்திரங்கள், பறிமாறப்ப‌டும் தட்டு, டம்ளர்கள் போன்றவை சுத்தமாக தண்ணீரில் கழுவ வேண்டும் அதேபோல் உணவு சமைக்க‍ப் பயன்படுத்த‍ப்படும் புத்த‍ம்புது காய்கறி (Fresh Vegetables))களை பயன்படு த்த‍ வேண்டும் அப்ப‍டி புத்த‍ம்புது காய்கறிகள் (Fresh Vegetables) பயன்படுத்தினாலும் அவற்றை ஒன்றிரண்டு முறை நல்ல‍ தண்ணீரில் நன்றாக அலச வேண்டும் அப்போ துதான் இதுபோன்ற பாதிப்புகள் நேராமல் உங்கள் ஆரோக்கியம் பாதுகாக்க‍ப் படும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

#அமீபியாசிஸ் #தொற்றுக் கிருமி #Amebiasis #Symptoms #vidhai2virutcham #விதை2விருட்சம் #CleanAndNeat

Leave a Reply