தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால்
தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால்
தினந்தோறும் நெய்யினை உணவில் சேர்த்து சாப்பிடுமாறு
ஆயுர்வேத மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிது. இதன்மூலம் நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான, மருத்துவகுணம் வாய்ந்த பொருள் என்பது தெரிகிது. மேலும் வாயு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு, நெய் ஒரு மா மருந்து ஆகும்.
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல்மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவர். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்து இன்மையே இவர்கள் எப்போதும் சோர்வுடன் உடல் வலியுடனயே காணப்படுவார் கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான அத்துனை சத்துக்களும் கிடைக்கப் பெற்று, உடல் முழு ஆரோக்கியம் பெறும் என்று கருதப்படுகிறது.